இயற்கை பண்ணை முறை விவசாயம் - வெளிநாட்டில் இருந்தபடி அசத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2020
00:00

சிவகங்கை மாவட்டம் படமாத்துார் அருகே சித்தாலங்குடியை சேர்ந்தவர் குமரேசன் 37. இவர் துபாயில் பணி புரிகிறார். அங்கிருந்தபடி தனது கிராமத்தில் இயற்கை பண்ணை முறையில் விவசாயம் செய்கிறார்.
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கருத்துக்களை மையமாக கொண்டு சித்தாலங்குடியில் 'தமிழ் நிலா' என்ற பெயரில் 28 ஏக்கரில் ஒருங்கிணைந்த இயற்கை பண்ணை முறை விவசாயம் செய்து வருகிறார். இதில் பூச்சி மருந்து, ரசாயன உரங்கள் ஏதுமின்றி இயற்கை உரங்களை வைத்து சொட்டு நீர் பாசனம் முறையில் விவசாயம் செய்கிறார். பஞ்சகவ்யம் தயாரித்து அதனை மட்டுமே விவசாயத்திற்கு உரமாக பயன்படுத்துகிறார். இப்பண்ணையில் கேரள மாநிலம் தலைசேரி ஆடுகள், நாட்டு ஆடுகள், நாட்டுக் கோழி பண்ணைகளை அமைத்துள்ளார். கொய்யா, தென்னை போன்றவைகளை வரப்பு பகுதியில் பயிர் செய்து வருகிறார். ஆடுகளுக்கு இயற்கையான பசுந் தீவனம், உலர் தீவனம், அடர் தீவனம் தேவையான அளவு வழங்கி ஒரு ஆடு 40 முதல் 50 கிலோ எடை வரை வளர்த்து விற்பனை செய்கிறார்.
கோழிகள், வாத்து, வான்கோழி போன்றவைகள் இயற்கையான முறையில் மேய்ச்சலுக்கு விட்டு அதன் முட்டைகளை சேகரிக்கும் பணியும் நடக்கிறது. இயந்திரம் மூலம் தீவனம் தயாரிக்கிறார். பஞ்சகவ்யம் தயாரிக்க தனி பிளான்ட் அமைத்துள்ளார்.
குமரேசன் கூறியதாவது: தண்ணீர் வசதிக்காக 4 இடங்களில் போர்வெல் அமைத்து சொட்டு நீர் பாசன வசதி செய்துள்ளேன். சூரிய ஒளி மின் சக்தியில் விளக்குகள், ஜெனரேட்டர், மின் இணைப்பு பெற்றுள்ளேன். ஆடுகள், கோழிகள் பராமரிப்பு செய்ய கால்நடை மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். பண்ணையில் கண்காணிப்பு கேமரா பொருத்தி பண்ணையில் நடக்கும் அனைத்து காட்சிகளும் அலைபேசியில் இணைப்பில் உள்ளது. எனது குடும்பத்தினர் மூலம் தொழிலாளர்களை நியமித்து பண்ணையை நடத்தி வருகிறேன், என்றார். தொடர்புக்கு 90808 55958.
- ப.அன்பழகன்
சிவகங்கை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthilnathan - Kuala lumpur,மலேஷியா
30-ஜூலை-202008:54:17 IST Report Abuse
Senthilnathan வெரி குட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X