''நாக்கில்
சுவையும், மூக்கில் வாசனையும் எப்போதும் போல் இருந்தால், நீங்கள் பயப்பட
வேண்டாம். சுவையும், வாசனையும் தெரியவில்லை என்றால், பரிசோதனை அவசியம்,''
என்கிறார் சித்த மருத்துவர் ராஜலிங்கம்.
சித்தாவில் கொரோனா எதிர்ப்பு சக்தி மருந்து உள்ளதா?
ஏற்கனவே
பல வைரஸ் நோய்கள் உள்ளன. காலம் காலமாக, இந்த நோய்களுக்கு சித்தாவில்
வைத்தியம் செய்து, நோய்களை குணப்படுத்தி வருகிறோம். இப்போது கொரோனா என்ற
பெயர்தான் நமக்கு புதியதே தவிர, நோயின் தன்மை பழையதுதான்.
இதற்கு
சித்தாவில் மருந்து உள்ளது. இதை மருந்து என்று சொல்வதை விட, உணவு என்றுதான்
சொல்ல வேண்டும். ஒருவருக்கு வைரஸ் காய்ச்சல் வந்து விட்டால், அதற்கு
மருந்தாக ஒரு ஸ்பூன் வெந்தயம், 10 மிளகு, ஐந்து வேப்பிலையை வறுத்து,
தண்ணீரில் கொதிக்க வைத்து, குடிக்க சொல்கிறோம். இதில் ஆன்டி வைரல் குணம்
இருக்கிறது. சிக்குன்குன்யா, டெங்கு காய்ச்சலை கூட இது கட்டுப்படுத்தும்.
சாதாரணமாக சளி, இருமல், காய்ச்சல் வந்தாலே மக்களுக்கு கொரோனா பயம் வந்து விடுகிறதே?
உண்மைதான்.
நாக்கில் சுவையும், மூக்கில் வாசனையும் எப்போதும் போல் இருந்தால், பயப்பட
வேண்டாம். சுவையும், வாசனையும் தெரியவில்லை என்றால் பரிசோதனை அவசியம்.
சைனஸ் உள்ளவர்களுக்கு, சித்தாவில் தீர்வு இருக்கிறதா?
ஏற்கனவே
சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு, இந்த சீசனில் மூக்கு அடைப்பு, முகத்தில்
அரிப்பு, தலைவலி, தொண்டைவலி போன்ற பிரச்னைகள் வரும். இதற்கு ஏற்கனவே என்ன
வைத்திய முறையில் மருந்து, மாத்திரைகள் எடுத்து கொண்டார்களோ, அதை எடுத்து
கொண்டாலே போதும்.இது கொரோனாவாக இருக்குமோ என்று சந்தேகம் இருந்தால்,
கொஞ்சம் மஞ்சள் பொடியை, மூக்குக்கு அருகில் வைத்து முகர்ந்து பார்த்தால்,
அதன் வாசனை தெரியும். வாசனை இல்லை என்றால் மருத்துவரை, அவசியம் பார்க்க
வேண்டும்.
மருத்துவர் வீரபாபு, கொரோனாவை குணமாக்க கொடுக்கும் மூலிகை தேநீர் பற்றி சொல்லுங்களேன்?
சித்த
மருத்துவர் வீரபாபு, கபசுரக் குடிநீருக்கு துணை மருந்தாக, மூலிகை
தேநீரையும் சேர்த்து கொடுத்து, தமிழக அரசின் ஒத்துழைப்புடன், கொரோனாவை
குணப்படுத்தி வருகிறார். இதை நாம் வீட்டிலேயே தயாரித்து குடிக்கலாம்.
சுக்கு, 100 கிராம், அதிமதுரம், 100 கிராம், சித்தரத்தை, 30 கிராம்
கடுக்காய்த்தோல், 30 கிராம் மஞ்சள், 10 கிராம், திப்பிலி, ஐந்து கிராம்,
ஓமம் ஐந்து கிராம், கிராம்பு ஐந்து கிராம், மிளகு ஐந்து கிராம் இவற்றை
இடித்துப் பொடி செய்து, வைத்து கொள்ள வேண்டும். 400 மில்லி நீரில் இந்த
பொடியை, 10 கிராம் அளவு போட்டு, நன்கு கொதிக்க விடவும்.இந்த கசாய நீர், 100
மி.லி., அளவாக வற்றியதும், ஒரு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை அல்லது தேன்
சேர்த்து இறக்கி, இளம் சூடாக வடிகட்டி, காலை மற்றும் இரவு உணவுக்கு பின்
குடிக்கலாம்.இந்த மூலிகை தேநீரை, நோய் பாதிப்பு உள்ளவர்கள் ஒரு வேளைக்கு,
100 மில்லியும், சிறுவர்கள், 50 மில்லியும் குடிக்கலாம். கொரோனா
இல்லாதவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இதை தினமும் ஒருவேளை வீதம்
காலையில் குடிக்கலாம்.