இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2020
00:00

எங்களாலும் முடியும்!
வேலை நிமித்தமாக, கோவையிலிருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள, சாயிபாபா காலனிக்கு, இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, வாகனம், 'பஞ்சர்' ஆனது.
அந்த ரோட்டில், 'பஞ்சர்' ஒட்டும் கடையை தேடி சென்று, வாகனத்தை நிறுத்தினால், அந்த கடையை நடத்துபவர், ஒரு திருநங்கை. அவருக்கு உதவியாக பணிபுரியும் இருவருமே திருநங்கையரே.
'பஞ்சர் பார்க்க வேண்டும்...' என்றதும், 'அசால்ட்'டாக சக்கரத்தை கழற்றி, ஐந்து நிமிடத்தில், 'பஞ்சர்' ஒட்டினர்.
சட்டென்று வேலையை முடித்த அவர்களை பாராட்டி, 'இந்த, 'பஞ்சர்' கடை துவங்கும் ஐடியா எப்படி வந்தது...' என்று கேட்டேன்.
'பஞ்சர் ஒட்டும் கடை நடத்தும் நண்பர் ஒருவர் கொடுத்த ஊக்கத்தாலும், பயிற்சியாலும் இக்கடையை ஆரம்பித்தேன்; உதவியாளர் கூட திருநங்கையரையே பணியமர்த்தினேன். எங்களாலும், எந்த தொழிலும் திறம்பட செய்ய முடியும்...' என்று, மலர்ந்த முகத்துடன் கூறிய அவரை, வாழ்த்தி வந்தேன்.
- வெற்றிச்செல்வன், கோவை.

கருப்பே அழகு!
பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்ணிற்கு, ஆறு மாதத்திற்கு முன்பு தான் குழந்தை பிறந்தது. கணவரும், அவளும் நல்ல நிறம். ஆனால், தாத்தா - பாட்டி போல், கருப்பான நிறத்தில் குழந்தை பிறந்திருந்தது.
குழந்தை வயிற்றில் இருக்கும்போது, நிறைய குங்குமப்பூவை சாப்பிட்டும் பலன் இல்லையே... குழந்தை கருப்பா பிறந்துடுச்சே என்ற கவலையில், 'யூ டியூபில்' குழந்தையின் நிறத்தை அதிகரிக்க, 'டிப்ஸ்' பார்க்க ஆரம்பித்தாள், அந்த பெண்.
முட்டையின் வெள்ளை கருவில் ஊற வைத்த கடலைப்பருப்பு, நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் பலவிதமான பொடிகள் கலந்து, குழந்தைக்காக, பிரத்தியேகமாக குளியல் பொடி தயார் செய்தாள்.
ஒரு மாதமாக குளியல் பொடியை போட்டும், குழந்தையின் நிறம் மாறவில்லை. மாறாக, குழந்தையின் சருமம் வறண்டு, அலர்ஜி வர ஆரம்பித்து விட்டது.
நாங்களும், பெண்ணின் பெற்றோரும், 'அட்வைஸ்' செய்த பின், நிறத்தை கூட்ட பொடி பூசுவதை விட்டு விட்டாள். குழந்தை மருத்துவரிடம் காட்டி, அலர்ஜியை சரி செய்தாள்.
நிறத்தை பற்றிய அறியாமை, எத்தனை தலைமுறை ஆனாலும் மாறுவதில்லை. கருப்பே அழகு என்று தெரியவில்லை. எதற்கெடுத்தாலும், 'யூ டியூப்' பக்கம் போகாமல், வயதானோரிடம் ஆலோசனை கேட்டு செய்வது நல்லது.
குழந்தையின் ஆரோக்கியம் முக்கியம் அல்லவா!
— லஷ்மி நாராயணன், புதுச்சேரி.

நட்பு பாராட்டுங்கள், நலமாக வாழுங்கள்!
'ஒவ்வொருவர் வாழ்விலும், மிகப்பெரிய மாற்றம் ஏற்பட காரணமானவர்கள், நண்பர்கள். நட்பு பாராட்டுவது, உங்கள் ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்...' என்று, 12 வகையான ஆய்வுகள் கூறுகின்றன.
தனியாக இருப்பவர்களுக்கும், சரியான நட்பு வட்டம் இல்லாமல் இருப்பவர்களுக்கும், 'ஹார்ட் அட்டாக்' அதிகம் வருவதாக கண்டறிந்துள்ளனர்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும், நட்பு பாராட்டுவதற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வயதில் மூத்தவர்களுக்கு, இது மிகவும் பயனளிப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.
அதிக நண்பர்களுடன் பழகுபவர்களுக்கு, ஞாபக மறதி நோயின் தாக்கம் குறைவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
உலகில், உண்மையான நட்புக்கு ஈடு இணை எதுவுமே இல்லை. சிறந்த நண்பர்களை அடையாளம் காண, கிட்டத்தட்ட, 2,௦௦௦துக்கும் மேற்பட்டோரை, ஆய்வுக்கு உட்படுத்தி, கண்டறிந்த விதிகள்:
* உங்கள் நண்பர்கள், நீங்கள் எப்போது கூப்பிட்டாலும், உடனே உங்கள் போனை எடுத்து பேச வேண்டும்
* எந்த பிரச்னை என்றாலும், நியாயமான கருத்தை சொல்லக் கூடியவராக இருக்க வேண்டும்
* இக்கட்டான சூழ்நிலையில் தோள் கொடுக்கும் முதல் ஆளாகவும், நீங்கள் சாய்ந்து அழ, தோள் கொடுக்கும் முதல் ஆள் அவராக இருக்க வேண்டும்
* உங்கள் ரகசியங்களை என்றென்றும் காப்பாற்றுகிறவராக இருக்க வேண்டும்
* உங்களுக்கு ஓர் ஆபத்து என்றால், நீங்கள் சொல்லாமலே அவர் களத்தில் குதித்து, உங்களுக்கு உதவுபவராக இருக்க வேண்டும்.
இந்த விதிகளை, உங்கள் நண்பர்களிடம் மட்டும் எதிர்பார்க்க கூடாது; நீங்களும் கடைப்பிடிக்க வேண்டும்.
- கோவீ.ராஜேந்திரன், மதுரை

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
03-ஆக-202010:44:13 IST Report Abuse
D.Ambujavalli நிறத்துக்கும் குங்குமப்பூவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை . மெகாத்தொடர்கள், திரைப்படங்களில், மனைவி /மருமகள் கர்ப்பம் என்று தெரிந்தவுடன் குங்குப்பூ வாங்க ஓடும் அறியாமையின் தாக்கம்தான் இது
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
02-ஆக-202014:02:38 IST Report Abuse
Manian நட்பு பாராட்டுங்கள் புதுச்சேரி. அது சரி, அப்பிடி கொரானா சமயத்திலே வராதேன்னு சொல்லாம, இப்ப கொஞ்சம் காதிலே ஒரே எறைச்சலா இருக்கே, அப்புறம் நானே கூப்படறேன் என்பவர்களை எத்தனை தடவை மன்னிப்பது? ஆமாம், வயதில் மூத்தவர்கள் ஏன் ஏழைக் குழந்தைகளுக்கு கதைகள் சொல்வதில்லை? நேரம் போகும், மூளைக்கு ரத்த ஓட்டம் சரியாகுமே ஆரம்ப கால உண்மையான நண்பர்கள் ஒண்ணோ, ரெண்டோதான் இருப்பாங்க. அப்படி ஒரு நண்பனை பாரர்கப் போனார் தெரிந்தவர் ஒருவர்.. பழய நண்பர் சொன்னாராம், நீங்க யார்னே தெரியலைங்க என்றாராம். நண்பர் துக்கத்துடன் எல்லோருமே கிரிஷனனை சீரியல்லே பாக்கப்போன குசேலன் இல்லைன்னு எப்பிடி புரிய வைக்கறதுன்னு தெரியலை என்றார். இது சொந்த அனுபவம் கூட. ஏற்கனவே முடிவு செய்தவங்க கிட்டே நியாயமா பேச என்ன இருக்கு. இந்த வாட்சு வாங்குனப்புறம் எப்படியிருக்குன்னா எந்த நியாயபடி சொல்ல முடியும். மனவி கிட்டே உண்மையா இந்த புடவை நல்லா இல்லை (பல பிள்ளைகள் தேவை இல்லாமல் பெற்று, குண்டாயிட்டே பூங்கோதை. வெளர் நிறத்திலே சின்ன சின்ன பூ போட்ட அந்த சாரி எடுப்பா இருக்குமே, உன்னை ஒசரமா ஒல்லியா காட்டுமே என்றாறாம் நண்பர்.சும்மா இருங்க,இது வைஜயந்தி மாலா காலமில்லே, ஓப்ரா வின்பிஃரி காலம் என்றாளாம். இந்த நண்பரிடம் என்ன சொல்லி தேற்ற முடியும்)? ரகசியம் காப்பாற்ற செத்தவனாலேதான் முடியும் என்கிறார் சோமு தாத்தா. ' ஓர் ஆபத்து என்றால், நீங்களே ஆம்புலன்சை கூப்பிட்டு ஆசுபத்திரிக்கு போகணும்.கடன் தான்னா பேங்கிலே உன்மனைவி 10பவுன் சங்கிலை அடகு வெச்சா கையிலே டாண்ணு காசு வருமே. போன வாரம் நான் அப்படித்தான் பண்ணிணேன்னு சொன்னா என்ன செய்வது..? இப்படி பட்ட நண்பர்களா களத்தில் குதித்து, உங்களுக்கு உதவுபவராக இருக்க வேண்டும்? சங்க கால அறிவுறைகளை, கணவன்-மனைவி-குழந்தை,விரட்டப்பட்ட பெற்றோர்கள் உள்ள நவீன காலத்தில் ஏற்பார்களா? சாலமன் பாப்பையா " வள்ளுவரின நட்பா, தற்போதய தப்பா" பட்டி மன்ற தலைப்பல்லவா என்று நண்பர் போனில் சொன்னார். உங்கள் தீர்ப்பென்ன?
Rate this:
Cancel
அப்பாவி - coimbatore,இந்தியா
02-ஆக-202011:49:05 IST Report Abuse
அப்பாவி நட்பு பாராட்டுங்கள், நலமாக வாழுங்கள் இது கிட்ட தட்ட மோடியின் பண மதிப்பு குறைப்பு நடவடிக்கை உரை போலவே இருக்கு.
Rate this:
Manian - Chennai,இந்தியா
03-ஆக-202007:27:54 IST Report Abuse
Manianதிருட்டு நண்பர்களுக்கும், திருட்டு கள்ளப் பணங்களுக்களும் பெருகும் போது நான் உதிப்பேன், கள்ளப் பணத்தை ஒழிப்பேன் என்று கிருஷ்ணன்,கபில் சிபிடம் சொன்னாரே அந்த சிதம்பபர ரகசியத்தை மறக்கலாமா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X