* 'மக்கள் பிரதிநிதி'ங்கிற அடையாளத்தோட எல்லா சலுகைகளையும் அனுபவிக்கிற அரசியல்வாதிகள், 'அரசு ஊழியர்கள்'ங்கிற அடையாளத்தோட மக்கள் வரிப்பணத்துல பெரும் ஊதியம் வாங்குற அதிகாரிகள்... இவங்க எல்லாரும், 'கொரோனா தடுப்பு பணி'யில உயிரை பணயம் வைச்சு ஈடுபடுறப்போ, 'கோவாக்சின்' தடுப்பு மருந்தை இவங்களுக்குத்தானே முதல்ல செலுத்தி பரிசோதனை பண்ணணும்; இதை விட்டுட்டு தன்னார்வலர்களை ஏன் தேடுறாங்க; பிரச்னை... மருந்துலேயா... மனசுலேயா!
* 'கல்லுாரிகளுக்கு விண்ணப்பிக்கிற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்லுாரி விண்ணப்ப கட்டணத்துல இருந்து விலக்கு அளிக்கணும்'னு, முதல்வருக்கு தமிழக அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை வைச்சிருக்கு! ஏங்க... இதுக்கு கூடவா அரசு உதவியை கேட்கணும்; ஊரடங்கு நாட்கள்லேயும் முழு ஊதியம் வாங்குற உங்களால, இந்த செலவைக்கூட ஏத்துக்க முடியாதா என்ன!
* 'கொரோனா' தொற்றால பாதிக்கப்பட்ட நபர்களோடு தொடர்பு இல்லாம இருந்தாலும் பாதிப்பு ஏற்படுது. தொற்றாளர்களோட நெருங்கி இருந்தவங்களுக்கு பாதிப்பு இல்லாமலும் இருக்குது. கள நிலவரம் இப்படி இருக்குறப்போ, 'கொரோனா தடுப்பு பணியில் இருந்தபோது இறந்தார்'னு விருது தரலாம்; ஆனா, 'நிவாரணம்'ங்கிற பேர்ல மக்களோட வரிப்பணத்தை லட்சக்கணக்குல அள்ளி இறைக்கிறது எந்தவகையில நியாயம்!
கடவுளே... இந்த கொரோனா ஒழியாதா?