தமிழக முதல்வர் பழனிசாமிக்கு,
அந்த சம்பவம் நடந்தப்போ, 'கோவிட் - 19 தடுப்பு நடவடிக்கை பணியாளர்கள்' அடையாள அட்டை எங்க அம்மா கழுத்துல இருந்தது. ஆனாலும், எந்த அரசு உதவியும் கிடைக்கலை. ஏன்னா... எங்க அம்மா ஒப்பந்த பணியாளர்!
கடந்த நான்கு ஆண்டுகளா இந்த துாய்மை பணியில எங்க அம்மா இருக்குறாங்க; ஜூன் 18ம் தேதி, நுண் உரம் செயலாக்க மையத்துல அவங்க வேலை பார்த்துட்டு இருந்தப்போ, இயந்திரத்துல வலது கை சிக்கி துண்டாயிடுச்சு.
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில அறுவை சிகிச்சை நடந்தது. பட்டுக்கோட்டை காவல் நிலையத்துல வழக்கு பதிவாச்சு. நகராட்சி ஆணையர் ஆறுதல் சொல்லி பணம் தந்தார்; ஆனா, அது சிகிச்சைக்கே போதுமானதா இல்லை.
வெளிநாட்டுல வெல்டரா வேலை பார்த்துட்டு இருந்த அப்பா, 'கொரோனா' சூழல்ல வேலை போய் ஊர் திரும்ப முடியாத நிலைமையில இருக்குறார். ஏற்பாடு பண்ணின அக்கா கல்யாணம் வழி தெரியாம நிற்குது. 'அம்மாவுக்கு செயற்கை கை பொருத்தணும்; உரிய இழப்பீடு வேணும்'னு கேட்டு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்கிட்டே மனு கொடுத்தாச்சு.
ஒரு வெளிச்சமும் இப்போவரைக்கும் இல்லை. 'மக்கள்தான் அரசு'ன்னு நீங்க அடிக்கடி சொல்றதெல்லாம் சும்மா வாய் வார்த்தைக்குதானா?
- பணியின் போது கை இழந்த ஒப்பந்த துாய்மை பணியாளரான 44 வயது ரேவதியின் மகள் திவ்யா, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்.