நாட்டுக்கோழிகளின் அன்றாடப் பிரச்னைகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2020
00:00

நாட்டுக்கோழி வளர்ப்பில் அவ்வப்போது ஏற்படும் சில பிரச்னைகளுக்கு தீர்வு காணும் சில வழி முறைகள் உள்ளன. கோழி முட்டையிடும் போது முட்டையின் அகன்ற பாகம் தான் முதலில் வெளி வரும். இது இயற்கையாக நடைபெறும் நிகழ்வு. சில சமயம் முட்டையின் கூரிய பாகம் முதலில் வெளியேறும். இதனால் முட்டையிடும் நேரத்தில் கோழி சிரமப்படும். இதை தவிர்க்க விரல்களில் விளக்கெண்ணெய்யை லேசாகத் தடவிக் கொள்ள வேண்டும்.

பின் கோழியின் ஆசன வாயில் விரலை விட்டு முட்டையின் கூரியமுனையை திருப்பி அகன்ற பாகத்தை மாற்றி வைத்தால் கோழி எவ்வித துன்பமும் இல்லாமல் முட்டையிட்டு விடும். கோழிகளுக்கு சில சமயங்களில் சிராய்ப்பு மற்றும் காயம்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. சிராய்ப்பு மற்றும் காயங்கள் ஏற்பட்டால் கோழிகளுக்கு சீழ் பிடிக்காது. ஏனெனில் கோழியின் உடல் வெப்பநிலை மற்ற பிராணிகளை காட்டிலும் கூடுதலானது. இதனால் சீழ்பிடிக்க வாய்ப்புகள் இல்லை. இவ்வாறாக சிறிய காயங்களை பற்றி கவலைப்பட தேவையில்லை.

ஆனால் கோழிகள் தங்கள் உடம்பில் பட்ட சிறிய காயங்களை கொத்தி, கொத்தி பெரிதாக்கி விடும். ஆகையால் மருத்துவரின் ஆலோசனைப்படி காயங்களுக்கு மருந்து போட வேண்டும்.
சத்து குறைந்த தீவனங்களை மட்டும் சாப்பிடும் கோழிகள் அளவுக்கு அதிகமாக தீவனம் எடுக்கும். இதனால் இரைப்பை பெரிதாகி விடும். தவிடு மற்றும் சோறு வகைகள் மட்டுமே தீவனமாக கொடுத்தால் இந்நிலை ஏற்படும்.

எதிர்பாராமல் நெல் மணிகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் கோழிகளுக்கு இரைப்பை பெருத்து விடுவதுண்டு. இந்நிலைமையை போக்க 15 சொட்டு விளக்கெண்ணெய்யை வாய் வழியாக கொடுக்கலாம். இத்தகைய கோழிகளுக்கு ஒருநாள் முழுவதும் தீவனம் தராமல் பட்டினி போட வேண்டும். பிறகு சத்துள்ள தீவனங்களை சேர்த்து கொடுத்தால் இக்குறையை நிவர்த்தி செய்து விடலாம்.
- டாக்டர். வி. ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை
94864 69044

Advertisement

 

மேலும் விவசாய மலர் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
08-ஆக-202023:29:30 IST Report Abuse
தல புராணம் நாட்டுக்கோழிகளின் அன்றாடப் பிரச்னைகள் (1) முட்டையை மனுஷன் திருடுறது.. (2) முட்டை போடுறதை நிப்பாட்டிட்டா தூக்கி குழம்புலே போடுவது.. இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு இருக்கா டாக்டர் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X