அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2020
00:00

ஆர்.கனகராஜ், மதுரை: நேற்று, இன்று, நாளை?
நேற்றும், இன்றும் ரஜினி ஒரு நடிகர். நாளை, அவர் கை காட்டுபவர், முதல்வர் ஆகலாம்! இல்லாவிட்டால், முகவரி இல்லாமலே போகலாம்!

ஆர்.சாந்தி, பொள்ளாச்சி: பெண்கள் முன்னேறி விட்டனரா?
இப்போதெல்லாம், 'டூ வீலர்'களை பெண்கள் தானே ஓட்டிச் செல்கின்றனர். ஆண்கள் பின்னால் தானே உட்காருகின்றனர்; பெண்கள் முன்னேறி விட்டனர் தானே!

* வி.கோபால், நெல்லை: உண்மையான நண்பன் என யாரை, 'செலக்ட்' செய்வது?
உண்மையான நண்பன், காட்டுக்கு கூப்பிட்டாலும் வருவான்; மற்றவன், கோடை வாசஸ்தலங்களுக்கு கூப்பிட்டால் தான் வருவான்!

ஆர்.கோபால், திருச்சி: ரஜினியை ஆதரிப்பவர்கள் யார்?
திராவிடக் கட்சிகள், காங்கிரசை பிடிக்காதவர்கள் தான்! முதலில் ஆதரிப்போர், அவரது ரசிகர்கள்!

* எம்.பழனியப்பன், திண்டுக்கல்: நான் ஒரு புதுக்கட்சி ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்... என்ன சொல்கிறீர்கள்?
'லெட்டர் பேட்' அடிப்பதிலும், 'போஸ்டர்' போடுவதிலும் கைக்காசை தொலைக்காதீர்கள் என்பது தான், என், 'அட்வைஸ்!'

எம்.ரஜினி, திண்டுக்கல்: உலகிலேயே அதிக மொழி தெரிந்தவர், எந்த நாட்டினர்?
எல்லா நாடுகளிலும் உள்ளனர்; ஆனால், அவற்றுக்கு மனித உயிர் கிடையாது! அச்சு இயந்திரங்களுக்குத் தான் அதிக மொழி தெரிந்திருக்கும்!

கே.ராஜ்குமார், கோவை: அரசியல்வாதிகளுக்கு ஏதாவது அறிவுரை கூற விரும்புகிறீர்களா?
இரண்டே கட்சிகள் இந்தியா முழுக்க பார்த்துக் கொள்ளுங்கள் என்பது ஒன்று... இரண்டாவது, ஆளும்கட்சிக்கு எதிராக, போராட்டங்கள் நடத்தாதீர்கள், அறிக்கைகளை வெளியிடாதீர்கள் என்பது தான்!

ஆர்.பாலாஜி, மதுரை: பணக்காரர்களுக்கும், ஏழைக்கும் என்ன வித்தியாசம்?
முதலாமவருக்கு, உண்ட உணவு செரிக்காமல் கஷ்டப்படுகிறார்; இரண்டாமவர், உணவு கிடைக்காமல் தவிக்கிறார்; இது தான் வித்தியாசம்!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
30-ஆக-202003:21:01 IST Report Abuse
naadodi எம்.ரஜினி, திண்டுக்கல்: உலகிலேயே அதிக மொழி தெரிந்தவர், எந்த நாட்டினர்? நெதர்லாந்து (ஹாலந்து) நாட்டினர் என்பது என் அபிப்ராயம்..(அங்கு சில காலம் வாழ்ந்ததால் சொல்கிறேன்)..பள்ளியில் நான்கு மொழிகள் கட்டாயம்..அதில் ஒன்று டச்சு..மற்ற மூன்று ஐரோப்பிய மொழிகளில் ஒன்றாக இருக்கும், (ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், போர்துக்கீஸ், இத்தாலியன், இன்ன பிற..)
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
23-ஆக-202023:46:21 IST Report Abuse
Manian பெண்கள் முன்னேறி விட்டனரா? 10%
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
23-ஆக-202023:45:22 IST Report Abuse
Manian அரசியல்வாதிகளுக்கு ஏதாவது அறிவுரை? லஞ்சவியாதிகளுக்கு குடும்பத்தோடு தூக்கு தண்டனை ராணுவ கோர்ட்டு சட்டம் என்று சட்டம் இயற்றுவதன் மூலம் என்றாலே மாறலாம். ஆனால் ராணுவமும் லஞ்சப்பிடியில் உள்ளதே ஆகவே அறிவாளிக்கு அறிவுரை தேவை இல்லை, முட்டாளுக்கு அறிவுரை புரியாது புள்ளி விவரம் இப்படித்தான் காட்டுகிறது. வள்ளுவர் பாடிய குறளே உதாரணம்- "நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு"(நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழ இல்லை, நண்பர் தவறு செய்யும் போது-லஞ்சம் வாங்குவது,ஓட்டை விற்பது, சொத்தை பிடுங்கி பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் தள்ளுதல்... நெறிக்கடந்து செல்லும் போது,அவை தவறு என்று விளக்கி நண்பனை நேர் வழிக்கு கொண்டு வருபவனே உண்மையான நண்பன் "”உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு"- நண்பனின் வேஷ்டி அவிழும்போது, அவன் கைதானே அதை தடுத்து நிறுத்திக் கொள்வது போல், நண்பனின் துன்பங்களை அவன் கேடடுக் கொள்ளாமலே குறைப்பது (நண்பனின் மனைவியிடம் அடி பெறுவது, அவன் கடனை அடைப்பது, வரி கட்டுவது,ஜெயிலுக்கு போவது போன்றவை இதில் அடங்காது) இவனுக்குப் பெயர்- ஏமாந்த சோணகிரி-எங்கே தேடுவேன்? ஆகவே, தற்காலிக நண்பர்களே அதிகம்- பாலுதவிசெய்யும் நண்பன்-நண்பிகள் சேர்ந்து வாழ்பவர்கள்(Living together- friends with fringe benefits) அதிகமாகி வருகிறது. இவ்வித நட்பின் வெளிப்பாடே சிபிலிஸ்(Syphilis), கோனேரியா (Gonorrhea ), கிளைமேடியா (Chlamydia) என்ற பால்வினை நோய்கள் அதிகரிப்பின் காரணம்- அரசியல் வியாதிகளை கேட்டுப் பாருங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X