தீர்வு கிடைக்கும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2020
00:00

எதைத் தேடினாலும் சரி, ஆர்வம் - ஊக்கம் - உறுதி ஆகியவை இருந்தால், எண்ணியதை எண்ணியபடியே அடையலாம் என்பது, திருவள்ளுவர் வாக்கு.
இதை விளக்கும் வரலாறு இது:
ஸ்ரீவில்லிப்புத்துாரில், சுப்பிரமணிய பிள்ளை - மீனாட்சியம்மை தம்பதியர் செய்த, தவப்பயனாக அவதரித்த ஞானக் குழந்தை, குருஞான சம்பந்தர். நாளொருமேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்த குழந்தை, சமஸ்கிருதத்திலும், தமிழிலும் கரை கண்டதாகவும் வளர்ந்தது.

ஒருநாள், பிள்ளையை அழைத்து மதுரைக்கு சென்றனர், பெற்றோர். சில நாட்கள் அங்கேயே தங்கி, சொக்கநாதரையும், அன்னை மீனாட்சியையும் தரிசித்தனர்.
ஊரை விட்டு புறப்படத் தீர்மானித்தபோது, 'நான் இங்கேயே, மதுரையிலேயே தங்குகிறேன்...' என்று, சொல்லி விட்டார், குருஞான சம்பந்தர்.
பெற்றோர் எவ்வளவோ வற்புறுத்தியும் மறுத்து, சிவபெருமானை துதித்துப் பாடவும் துவங்கி விட்டார்.
'சரி... பிள்ளை, நல்வழியில் தான் செல்கிறான்...' என்ற திருப்தியோடு, ஊர் திரும்பினர், பெற்றோர்.
மதுரையிலேயே தங்கி, பொற்றாமரைக் குளத்தில் நீராடி, சொக்கநாதரையும், அன்னை மீனாட்சியையும் தரிசித்தபடி இருந்தார், குருஞான சம்பந்தர்.
வழக்கப்படி ஒருநாள், நீராடச் செல்கையில், பொற்றாமரைக் குளக்கரையில் அடியார்கள் பலர், நீராடி, சிவ பூஜை செய்து கொண்டிருந்தனர்.
அதைப்பார்த்த குருஞான சம்பந்தருக்கு, நாமும் இவ்வாறு பூஜை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது.
நீராடியதும், சொக்கநாதர் சன்னிதியில் நின்று, 'சொக்கநாதா... அடியேனும் இதேபோலத் தங்களை பூஜிக்க விரும்புகிறேன். திருவருள் புரிய வேண்டும் சுவாமி...' என, வேண்டுதல் வைத்து, தன் இருப்பிடம் திரும்பினார்.
அன்றிரவு, குருஞான சம்பந்தரின் கனவில் காட்சியளித்தார், சொக்கநாதர்.
'அன்பனே... பொற்றாமரைத் திருக்குளத்தில், வடகிழக்கு மூலையில், கங்கைக்குள் யாம் எழுந்தருளி இருக்கிறோம். காலையில் அங்கு சென்று, மூழ்கி எழுந்து எம்மை பூஜிப்பாயாக...' என்று, சொல்லி மறைந்தார்.
இறைவன் திருவருளை எண்ணி மகிழ்ந்த குருஞான சம்பந்தர், மறுநாள் அதிகாலையில் எழுந்து, பொற்றாமரை குளத்தில் நீராடி, இறைவன் சொன்ன இடத்தில் மூழ்கி தடவிப் பார்த்தார். பூஜை பெட்டி ஒன்று கைகளில் சிக்கியது. எடுத்து, திறந்து பார்த்தார்; உள்ளே சிவலிங்கம் இருந்தது.
மகிழ்ச்சி தாங்கவில்லை, பூஜை பெட்டியோடு சொக்கநாதர் சன்னதி சென்று, 11 பாடல்கள் பாடித் துதித்தார்.
குருஞான சம்பந்தர், பூஜை பெட்டியைத் தேடியதைப் போல், நாம் ஆரோக்கியத்தை தேடிக் கொண்டிருக்கிறோம். அவருக்கு, பூஜை , நமக்கும் ஆரோக்கியம் கிடைக்கும், அல்லல்கள் நீங்கும்; சந்தேகமேயில்லை.

ஆன்மிக தகவல்கள்!
பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வ சிலைகளையும் வைப்பதற்காக, அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது.

பி. என். பரசுராமன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
24-ஆக-202000:02:32 IST Report Abuse
Manian ஐயோ, ஆஸ்திரேலியா மியூசியம் 1 கோடி ரூ தற்றோம், அந்த பூஜைப் பெட்டியை கொண்டு வாங்க என்னாங்களே, அது இதுதான். நமக்கு முந்தியே குரு ஞான சம்பந்தர் பெட்டியை லவட்டிட்டாரே சொக்கனை அதைப்பத்தி கேக்கலாம்னா, அவரையுமில்லே நமக்கு முன்னாடி இருந்த அறங்காவலர் குழு ஏற்கனவே ஏற்றுமதி செஞ்சு போட்டாங்களே எந்த நாட்டுக்குன்னு மீனாட்சி சொல்ல மாட்டியா? அண்ணே தும்பிக்கை ராசு, அசல் மீனாட்சியுமில்லே கப்பலேறிபூட்டாளே சிலை ஏற்றுமதியாளர் கோடீஸ்வரர் முத்தையா ஸ்தபதிக்கு ஒரு செல்லடிக்கலாமா? அவரு எந்த கிருஷ்ணபவன்லே (தமிழ்-சிறைச்சாலை) இருக்காறுன்னு மொதல்ல கண்டுபிடி கண்ணப்பா
Rate this:
Ram - Thanjavur,இந்தியா
24-ஆக-202010:02:46 IST Report Abuse
Ramகேட்கவே அதிர்ச்சியை இருக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X