வீட்டுக்குள் எழும், 'அரசியல்' பிரச்னையை, நாலு சுவற்றுக்குள் ஓரளவுக்கு பேசி சமாளித்து விடலாம். ஆனால், ஒருவரை இன்னொருவர் கவிழ்க்க பார்க்கும், அலுவலக அரசியலை சமாளிப்பது, ரொம்ப கஷ்டம். பொதுவாகவே அலுவலக பாலிடிக்சில் சிக்காமல் இருக்க என்ன தான் வழி... உங்களை ஏதாவது ஒரு விஷயத்தில் சிக்க வைக்க பார்ப்பர், சிலர். அதிலும், ஒரே குழுவாக இணைந்து வேலை செய்யும்போது, வேலையில் ஏதாவது தவறு ஏற்பட்டால், அதற்கு, உங்களை காரணமாக்கி சிக்க வைக்க பார்ப்பர். இந்த மாதிரி நேரத்தில், தப்பு உங்கள் மேல் இருந்தாலும், இல்லா விட்டாலும், அதை பற்றி நேரடியாக உங்கள் நிர்வாகியிடம் பேசி, விளக்கம் கொடுத்து விடுங்கள். உங்க மேல் தப்பு இல்லையெனில், அதை விளக்கமாக சொல்ல பாருங்கள். தப்பிருந்தால், அதற்கு மன்னிப்பு கேட்பதுடன், அதை சரி செய்ய வாய்ப்பும் கேளுங்கள். அலுவலகத்தில் எப்போதும் உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில், 'என்ன கேட்டா... அப்படி'ன்னு ஆரம்பித்து, 'அட்வைஸ்' பண்ண ஆரம்பித்து விடாதீர்கள். இப்படி சம்பந்தமில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்தால், நிறைய பேரின் கோபத்தை தான் சம்பாதிப்பீர்கள். இதன் விளைவு, உங்களுடைய சின்ன சின்ன குறைகளை கூட சரியான நேரத்தில், உங்கள் நிர்வாகியிடம் போட்டுக் கொடுத்துவிடுவர். 'கிசுகிசு' பேசுவதற்கும், உடன் வேலை பார்ப்பவர்களை கேலி செய்வதற்கும் எல்லா அலுவலகத்திலும் ஒரு கும்பல் இருக்கும். அது, உங்களை பற்றி, 'கிசுகிசு' பேசினால், வருத்தப்படாதீர்கள். கேலி செய்தால், கண்டுக்கவே கண்டுக்காதீர்கள். அதே நேரத்தில், இந்த கும்பலுடன் சேரவும் சேராதீர்கள். நிர்வாகம், உங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையை இழந்துவிடும். உடன் பணிபுரியும் யார் மேலாவது உங்களுக்கு நல்ல அபிப்ராயம் இல்லையென்றால் கூட, அதை உங்கள் மனதுடன் வைத்துக் கொள்வது தான் நல்லது. உங்களுக்கு கொடுத்த வேலையை, குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்து கொடுத்து விட்டால், எந்த அலுவலக அரசியலும் ஒண்ணும் பண்ண முடியாது. நிர்வாகிக்கு, 'ஐஸ்' வைக்கிற கெட்ட பழக்கத்தை கண்டிப்பாக, 'அவாய்டு' செய்யுங்கள். 'சே... இந்த அலுவலகமே மோசம்'ன்னு சொல்லும், 'நெகட்டிவ்' பேர்வழிகள் சிலர் இருக்க தான் செய்வர். தயவு தாட்சண்யம் பார்க்காமல், இவர்களின் நட்பை, 'கட்' செய்து விடுங்கள். உங்களுடைய குறைகளை எடுத்து சொல்லி, உங்கள் புரொபஷனல் வாழ்க்கைக்கு உதவும், 'பாசிட்டிவ்' நட்புகளுக்கு, ஓ.கே., சொல்லுங்கள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
இதை விட ஒரு சிறந்த வழியை காலம் சென்ற நண்பர் எனக்கு காட்டியுள்ளார். செஎன்னை வருமான வரி அலுவலகத்திற்கு என்னைக் கூட்டிச் சென்றார். சுமார் 15 நிமிஷங்கள் மூன்று கீழ் நிலை வேலையாட்களுடன் பேசினார். என்னங்க நல்லா இருக்கீங்களா? மனைவி நலமா? பிள்ளைங்க நல்ல படிக்கிறாங்கன்னு சொன்னீங்களே இப்பவும் அப்படித்தானா என்று மூன்று பேரிடமும் இனிமையாக கேட்டார். கடைசி ஆள், சார் நீங்க இப்போன ஆபீசர் ஆனந்தகுமாரை (பெயர் கற்பனையே) பாத்துடலாம். பைலை நான் கொண்டாரேன் என்று சொல்லி அவரை உள்ளே கூட்டிப் போனார்.1/2 நேரத்தில் காரியம் முடிந்து சிரித்தபடியே வெளியே வந்தார். வீட்டிற்கு வந்ததும் அவர் சொன்னது: என் ஆசிரியர் புண்யகோடி எனக்கு தந்த அறிவுரையை நடை முறையில் இன்று பார்த்தாய். "துஷ்டம் ப்ரதமே வந்திதம் - துஷ்டர்கள் முதல் வணக்கத்திற்குரியவர்கள்." அதாவது நந்தனாருக்கு சிவ தரிசனம் கிடைப்பதை தடுக்க முனைபவர் இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம். ஆகவே அவர்களிடம் அவர்கள் குடும்ப நலனை முதலில் பணிவாக, இனிமையாக கேட்க வேண்டும். மேல் நாடுகளிலும் இப்படியே. உடனே, இவர் நம்ம ஆள், எவ்ளோ அன்பு என்று நினைப்பார்களாம்.நமக்கு இவர் எதிரி இல்லை, நம்மவர் என்று "சற்றே விலகி இரும் பிள்ளாய்,சன்னதி மறைக்குதாம் " என்ற உள் குரலால் உதவுவார்கள்" என்றார். ஹாரர்வேர்டில் மனநலம் கற்ற மருத்துவ நண்பரும் அது சரியான முடிவு என்றார். நந்திகளை கண்டு, அவர்கள் ஈகோவை கூட்டி, நம்மை தாழ்த்தி காட்டும் கலையை கற்க வேண்டும். "அடியேன் தாசன்" என்று கூறும் முறை இதற்கு வஞ்சகப் புகழ்ச்சி ஒரு பெயரும் உண்டு. சைனர்கள், "இந்த நாய் உங்கள் அன்பை நாடுகிறது என்பார்களாம், பின்னால் அல்சேஷாக மாறி கடிப்பார்களாம்.1962ல் சைனா சூ என்லாய் நேருவை அப்படித்தான் கடித்தான். 2020 மோடி சைனா ஜிங் பி நாயை கடிக்க விடவில்லை கற்றதும், பெற்றதும், பலன் அடைந்ததும்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.