சாம்சங் நிறுவனம் அதன் மடித்து நீட்டும் வகையிலான, 'போல்டபிள் போன்' வரிசையில் புதிதாக, 'கேலக்ஸி இசட் போல்டு 2' எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
கேலக்ஸி போல்டு வரிசையில் இது, மூன்றாவது அறிமுகம் ஆகும். இதற்கு முன், 'கேலக்ஸி போல்டு' மற்றும்,'கேலக்ஸி இசட் பிளிப்' ஆகியவை அறிமுகம் ஆகியுள்ளன.
தற்போது அறிமுகம் ஆகியிருக்கும், 'கேலக்ஸி இசட் போல்டு 2' போனை இரண்டாக மடித்துக் கொள்ள முடியும். மேலும், 7.6 அங்குல பெரிய திரையும் இருக்கிறது. கூடுதலாக,'அல்ட்ரா தின்
கிளாஸ்' பாதுகாப்புடன் வந்துள்ளது.
மூன்று கேமரா வசதியுடன், ஒயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இருக்கிறது. இந்த போன் இந்தியாவில் எப்போது அறிமுகம் ஆகும் என்பது தெரியவில்லை. எதிர்பார்க்கப்படும் விலை: 1,48,300 ரூபாய்.