அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2020
00:00

லெ.நா. சிவக்குமார், சென்னை:ஞாயிற்றுக்கிழமை என்றால், மதிய சாப்பாட்டில், 'கறி' இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி; தமிழகத்தில் மட்டுமா அல்லது நாடு முழுவதும் உண்டா?
தமிழகத்தில், வசதியானவர்கள் வீட்டில் தினமும் உண்டே; நாடு முழுவதும் இதே நிலை தான்! காஷ்மீரில், பிராமணர்கள் வீட்டிலும் இதே நிலை தான். அதே நேரம், சாப்பாட்டு தட்டில் சோற்றை, நாம் வைப்பதற்கு எதிராகவும், மற்ற கறி, கூட்டை, சோறு வைக்கும் இடத்திலும் வைத்து உண்பர்!

* ஷோபனாதாசன், நாட்டரசன்கோட்டை, சிவகங்கை: நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க, மத்திய அரசால் முடியாது என, ராகுல் குற்றம் சாட்டியுள்ளாரே...
இவர்கள் ஆட்சியில் இருந்த போதெல்லாம், இளைஞர்கள் முழுமையாக வேலையில் இருந்துள்ளனரா என்ன?

* கி என்.ஜெ.மகாலிங்கம், நெடுகுளா, நீலகிரி: நடிகர்களால், அரசியல்வாதி ஆக முடிகிறது... ஆனால், அரசியல்வாதிகளால் நடிகர்களாக முடிவதில்லையே... ஏன்?
ஏற்கனவே மக்கள் முன் நடித்துக் கொண்டிருப்பவர்கள், திரையில் வர விரும்புவதில்லை... அதனால் தான்!

அப்துல், திருச்சி: மருத்துவர் ஆகியே தீரவேண்டும் என்று, இன்னும் கனவு காணும், மாணவ - மாணவியருக்கு, என்ன சொல்ல விரும்புகிறீர்கள்...
நல்ல கனவு தான்; வாழ்த்துக்கள்! ஆனால், 'நீட்' தேர்வுக்கு தயார் செய்து கொள்ளுங்கள். அரசும், நீதியும் இதில் பிடிவாதமாக உள்ளன. வசதி இருந்தால், பழைய ரஷ்ய நாட்டிலிருந்து பிரிந்த நாடுகளில் கல்வி பயில செல்லுங்கள். அங்கெல்லாம், 'நீட்' தேர்வு கிடையாது!

* கி. ரமேஷ், நெல்லை: அரசியல் உலகில், பெண் தலைவிகள் ஏன் அதிகமாக இல்லை?
ஆண் அரசியல் தலைவர்கள் பேச வரவே, இரண்டு மணி நேரமாகிறது. பெண் தலைவிகள் என்றால், அவர்கள் தலை சீவி, பூ வைத்து புறப்படுவதற்குள், கூட்டத்தின் தேதியே மாறி விடுமே! இதனாலேயே பெண் தலைவிகள், அரசியலில் அதிகம் இல்லை!

கி. அம்பரிஷ், சென்னை: இந்நாளில், நீதி, நேர்மை, நியாயம் என்று சொல்வதெல்லாம் ஒன்றா?
காலை, 'டிபன்' - தோசை, இட்லி, இடியாப்பம் எல்லாம் ஒன்றா... என கேட்டால், எல்லாம் ஒன்று தான்! 'டேஸ்ட்' மட்டும் தான் கொஞ்சம் வித்தியாசம்! அவ்வளவு தான்!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
14-செப்-202009:34:55 IST Report Abuse
Manian கி. அம்பரிஷ்: 'கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை' என்று கடவுளை கண்டேன் என்று சொன்னது போலவே.இதையே "போலி பேனா விற்பவன் "ஜப்பான் பைலோ, ரூவாக்கு 1ன்னு, ஒவ்வொரு மடையனும் ' ஜப்பானில் செய்யப்பட்ட பைலட் பேனா, எவ்ளோ சல்லிசுன்னு' வாங்கறவங்க நிலைமைதான். "
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
14-செப்-202009:24:00 IST Report Abuse
Manian கி. ரமேஷ்: ஆண்களே ஒரு வேளை சிறந்த ஒப்பணைக்காரர் மூலம் பெண் வேடமிட்டு, என்னை அரசியலில் ஜெயிக்க வைத்தால்,அப்புறம் அயித்தான் நான் தன் ஒங்க சின்ன வூடுன்னு சொல்லி ஏமாந்தால் , கோடிக்கோடி மாமூலும் போகுமே என்ற பயமும் இருக்கலாமே
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
14-செப்-202008:34:31 IST Report Abuse
Manian மகாலிங்கம்: ஏற்கனவவே வற்ற மாமூல் வசூலையும், சேர்த்து வருமான வரி கட்டணுமே சின்ன வூட்டுக்கு தெரிஞ்சான்ன பயம் வெரே அந்த தொகையைப் பாத்து வருமான வரிக்காரனுக அரசியல் வியாதிகளானா என்னாகும்ங்கற பயம்..பயம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X