சந்தானத்தின் புதிய, 'பிளான்!'
காமெடியன் சந்தானம், 'ரொமான்டிக், திரில்லர்' படங்களில், 'ஹீரோ'வாக நடித்தவர். தற்போது, 'ஆக் ஷன் ஹீரோ'வாகவும் உருவெடுத்துள்ளார். இந்த நிலையில், 1990ல், கமல் நடித்த, மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற, 'வச்சாலும் வைக்காம போனாலும்...' என்று துவங்கும் பாடலை, தன், டிக்கிலோனா படத்திற்காக, 'ரீ - மிக்ஸ்' செய்து, கமல், 'கெட் - அப்'பில் தோன்றி, அவரது நடிப்பையும் உள்வாங்கி நடிக்கிறார். அதேபோல், அடுத்தடுத்து, ரஜினி, விஜய், அஜீத் போன்ற நடிகர்களின் சூப்பர், 'ஹிட்' பாடல்களையும், தன் படங்களில், 'ரீ - மிக்ஸ்' செய்யும் மெகா, 'பிளானும்' வைத்துள்ளார்.
- சினிமா பொன்னையா
வளைந்து கொடுக்கும், ராசிகண்ணா!
குஜராத் குதிரை, நமீதாவிற்கு பிறகு, கோலிவுட்டில் தர்பார் செய்து வரும், இன்னொரு முரட்டு அரேபிய குதிரை தான், ராசிகண்ணா. இவரது ஆஜானபாகு தோற்றம், உயரத்தைப் பார்த்து, 'மீடியம் ஹைட்' கொண்ட, 'ஹீரோ'கள், தெறித்து ஓடுகின்றனர். ஆனால், ராசியோ, 'உயரம் ஒரு பிரச்னையே இல்லை. நீங்கள், என்னை விட, உயரம் குறைவாக இருந்தாலும், நான் வளைந்து கொடுத்து நடிப்பேன்...' என்று, தன்னை விட குள்ளமான, 'ஹீரோ'களிடம் இறங்கிச் சென்று வாய்ப்பு கேட்டு, அசர வைக்கிறார். எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்க வேண்டும்!
- எலீசா
இயக்குனர்களை துரத்தும், நிவேதா தாமஸ்!
ரஜினி, கமலுக்கு மகளாக நடித்து விட்ட, நிவேதா தாமஸ், அடுத்து, 'ஹீரோயினி'யாக வேண்டும் என்று முயற்சி எடுத்தார். ஆனால், 'உங்கள் மீது மகள், 'சென்டிமென்ட்' அழுத்தமாக பதிந்து விட்டது...' என்று சொல்லி, தொடர்ந்து அவரை மகள் கதாபாத்திரங்களில் நடிக்கவே அழைக்கிறனராம், இயக்குனர்கள். இதனால் கவலையில் இருந்து வரும், நிவேதா, 'சென்டிமென்ட் வேடத்தில் நடித்த நடிகை, 'ரொமான்ஸ்' பண்ணக்கூடாதா... இல்லை எனக்கு, 'ரொமான்ஸ்' பண்ணத்தான் தெரியாதா...' என்று சொல்லி, 'ரொமான்ஸ் லுக்' விட்டபடி, 'ஹீரோயினி' வாய்ப்புகளுக்காக, சில இயக்குனர்களை விடாமல் துரத்தி வருகிறார். கண்ணும் கருத்தும் உள்ளபோது இல்லாமல், கண் பஞ்சு அடைந்த பின் என்ன கிடைக்கும்!
- எலீசா
பூர்ணா செய்த, 'டிரண்டிங்!'
கதாநாயகி வாய்ப்புகள், 'பேக்' அடித்ததால், கொடி வீரன் என்ற படத்திற்காக நிஜமாலுமே மொட்டையடித்து நடித்த பூர்ணா, அதன்பிறகு ஒரு படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாகவும் நடித்தார். ஆனபோதும், தன் உடல்கட்டை கனகச்சிதமாகவே பராமரித்து வருகிறார். சமீபத்தில், அவர் தன், 'சோஷியல் மீடியா'வில் வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள், 'இது, புராண காலமாக இருந்தால், உங்கள் அழகில் மயங்கி ராவணன், உங்களை துாக்கிக் கொண்டு போய் விடுவான்...' என்று, 'கமென்ட்' கொடுத்து, அவரது அழகை மானாவாரியாக வர்ணித்து தள்ளி விட்டனர். இதனால், உச்சி குளிர்ந்து போன பூர்ணா, அந்த, 'கமென்ட்'டை தன் நட்பு வட்டாரத்திற்கு, 'டிரண்டிங்' செய்து பெருமையடித்து வருகிறார். அவள் அழகைப் பார்த்து கிளி கொஞ்சும்!
- எலீசா
சமந்தா இடத்தில், பிரியா பவானி சங்கர்!
சின்னத்திரையில் இருந்து வந்து சினிமாவில் கோலேச்சி வரும், பிரியா பவானி சங்கருக்கு, டோலிவுட்டில் இருந்தும் சினிமா, 'ஆபர்'கள் வருகின்றன. குறிப்பாக, சமந்தாவை, 'மைண்டில்' வைத்து, கதை பண்ணிய இயக்குனர்கள், அவருக்கு திருமணமாகி விட்டதால், அந்த இடத்தில், பிரியா பவானி சங்கரை வைத்து பார்க்கின்றனர். இதனால், இன்ப அதிர்ச்சியடைந்துள்ள, பிரியா, தெலுங்கில், சமந்தாவின், 'நம்பர் ஒன்' இடத்தை தட்டித்துாக்கி விடவேண்டுமென்று, அடிக்கடி ஐதராபாத்திற்கு விஜயம் செய்யத் துவங்கியுள்ளார்.
- சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
ஜெயமான நடிகர், 'ஆக் ஷன்' கதைகளில் நடித்தபோதும், அவரது, 'பிளேபாய் இமேஜ்' இன்னும் அவரை விட்டுப் போகவில்லை. இதற்கு காரணம், அவர் நடிக்கும், 'ஆக் ஷன்' படங்களிலும், 'ஹீரோயினி'யிடம் வழிவது மற்றும் 'கிளுகிளு'ப்பான காட்சிகளில் அவரை, 'ஓவராக' நடிக்க வைத்து, அவரது, 'ஆக் ஷன் இமேஜை' இயக்குனர்களே, 'டேமேஜ்' பண்ணி விடுகின்றனர்.
அதனால், சமீப காலமாக விழித்துக்கொண்டுள்ள, ஜெயமானவர், 'இனிமேல் என் படங்களில், 'ரொமான்சை' குறைத்து, 'ஆக் ஷனை' மட்டும் துாக்கலாக வையுங்கள்; ஆரம்ப காலத்தில் இருந்த அதே, 'பிளேபாய் இமேஜ்' இப்போது வரை தொடர்வது, நான் அடுத்த கட்டத்துக்கு செல்வதை தடுப்பதாக உள்ளது...' என்று, இயக்குனர்களை கைகூப்பி கேட்டு வருகிறார்.
'டேய் ரவி... உனக்கு ஏண்டா இந்த விபரீத ஆசை. அந்த வாலு பையனோடு சேர்ந்து மரம் ஏறுகிறேன், 'பைட்' பண்றேன்னு, களம் இறங்கிட்ட... உன்னால முடியுமாடா...' என்றார், அம்மா.
'போம்மா... எப்பப்பாரு சின்ன பையனாட்டம் என்னை எதுவும் செய்ய விடமாட்டேங்கிற... இனிமே, நானும் மத்தவங்கள மாதிரி, எல்லாவற்றிலும் சேர்ந்து, துாள் கிளப்பப் போறேன்...' என்று கூறி, ஓடி விட்டான், ரவி.
சினி துளிகள்!
* 'பொன்னியின் செல்வன் படத்தில், நான் நடித்து வரும் அருண்மொழிவர்மன் கதாபாத்திரம், என் சினிமா கேரியரில், புதிய மைல் கல்லாக அமையும்...' என்கிறார், ஜெயம்ரவி.
அவ்ளோதான்!