அரிசியில் அசத்தும் ஆத்தூர் கிச்சிலி சம்பா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2020
00:00

கலப்பினம் இல்லாத ஆத்துார் கிச்சிலி சம்பாவை அறுவடை செய்வது பாரம்பரியத்தை மீட்டெடுப்பதற்கு சமம் என்கிறார் ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜபுரத்தைச் சேர்ந்த விவசாயி பிரபாகரன்.
பொன்னி கூட கலப்பின ரகம் தான் என்று கூறும் பிரபாகரன் கிச்சிலி சம்பாவின் பெருமைகளை விளக்கினார். பாரம்பரிய ரகங்களில் 99 சதவீதம் சிவப்பு நிற மோட்டா அரிசி தான். விளைச்சலும் குறைவாக இருக்கும். ஆத்துார் கிச்சிலி சம்பா சன்ன ரகத்தோடு வெள்ளை நிறத்துடன் பொன்னி அரிசிக்கு நிகராக உள்ளது. இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து மிகுந்து சாப்பாட்டுக்கு சிறந்த ரகமாக உள்ளது. மரபணு மாற்றம் செய்யப்படாத இந்த ரகத்தில் விவசாயிகள் எதிர்பார்க்கும் விளைச்சலும் கிடைக்கும்.
5 மாத விளைச்சலான இந்த ரகம் சம்பா சீசன் எனப்படுகிறது. ஆடிப்பட்டத்தில் இருந்து தைப்பட்டத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே விளைகிறது.
நாற்றாங்காலில் இருந்து கை நடவு அல்லது மெஷின் நடவு முறையில் நடலாம். ஒரு மாதத்தில் செடி படர்ந்து விடுவதால் களைகள் குறைவாக இருக்கும். கையால் களை எடுத்தால் போதும். கூடுதல் தண்ணீர் கட்டி விட்டால் களைகள் வளராது. களைக்கொல்லி பயன்படுத்த வேண்டாம். ஐந்தடி உயரத்தில் இயற்கையாகவே நோய், பூச்சி தாக்குதல் இன்றி வளரும். இதற்கு உரம் போடத் தேவை இல்லை.
அதிக செலவின்றி விவசாயிகளின் கையை கடிக்காத இந்த ரகம் நமது பாரம்பரியத்திற்கு சொந்தம் என்பதால் இதை சாகுபடி செய்கிறேன். தற்போது அறுவடை முடிந்து அரிசியாக விற்பனை செய்கிறேன் என்றார்.
தொடர்புக்கு: 73971 25354.
- எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-செப்-202003:07:41 IST Report Abuse
Ganesan Madurai மிகவும் மகிழ்ச்சி.
Rate this:
Cancel
Baskar - sollamudiyatha naadu,இந்தியா
16-செப்-202002:18:40 IST Report Abuse
Baskar என்னது ஐந்து அடி உயரமா ? இருந்தாலும் மணப்பாறை மாடு கட்டி , சிவாஜி பாடினது ஞாபகம் வருது . என்னால முடிஞ்சது கருத்து பதிவிட்டேன் . இதோட சத்து , ப்ரோடீன் , கார்போஹைட்ரெட்ஸ் டேபிள் வெளியிட்டு இருந்தால் நன்றாக இருக்கும் . உதாரணமாக வரகு தானியங்களில் 40-60% கார்போஹைட்ரெட்ஸ் உண்டு .
Rate this:
Cancel
RAMAKRISHNAN K - East Tambaram, Chennai,இந்தியா
15-செப்-202022:49:13 IST Report Abuse
RAMAKRISHNAN K அது "கிச்சிலி" சம்பா இல்லை, "கிச்சடி" சம்பா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X