ஒரு சின்ன பர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2011
00:00

அன்றும் இன்றும் என்ற தலைப்பில் நீங்கள் கொடுத்துள்ள தகவல்கள் வேடிக்கையாக இருந்தாலும், எப்படி சொற்களும் அவை குறிக்கும் பொருட்களும், நம் காலத்திலேயே மாறி, நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன என்று காட்டுகின்றன.
-டி.ஜெசிந்தா, மதுரை.

தொடர்ந்து நீங்கள் அளித்து வரும், ஆப்பரேட்டிங் சிஸ்டம் சம்பந்தமான குறிப்புகள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. இதே போல் இன்னும் பல தொழில் நுட்ப சொற்களுக்கான விளக்கங்களைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-என். இன்ப சகாயம், பாலிடெக்னிக் கல்லூரி, கோவை.

இன்றைய கம்ப்யூட்டர் விலையில் பாதி குறைவான விலையில் டேப்ளட் பிசி கிடைத்தால் தான் அது பட்ஜெட் விலையாகும். ஏனென்றால், ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் தரும் முழுமையான பயனை அது தரும் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லையே!
-கே. பீதாம்பரம், விழுப்புரம்.

வேர்டில் எழுத்துக்களை எம்பெட் செய்வது குறித்து நீங்கள் எழுதிய பின்னரே அறிந்தேன். தகவலுக்கு நன்றி.
-கா. ஆதிராஜ், திண்டுக்கல்.

கம்ப்யூட்டருக்குள் ஒரு திறனாய்வு என்ற தலைப்பில் நீங்கள் கொடுத்துள்ளபடி என் கம்ப்யூட்டரை இயக்கினேன். சிறிது நேரம் எடுத்துக் கொண்டாலும், பல தொழில் நுட்ப தகவல்களை அறிய முடிந்தது. கம்ப்யூட்டர் வாங்குகையில், நிறுவனங்கள் நம் வாசகர்களை ஏமாற்ற முடியாத நிலைக்கு உயர்த்தி விட்டீர்கள்.
-சா. எழில்ராணி, தாம்பரம்.

விண்டோஸ் எக்ஸ்பி விட்டுவிடுங்கள் என்ற தலைப்பு வேடிக்கையானதாக இருந்தாலும், மாற்றத்தை விரும்பாத நம் மக்களுக்கு நல்ல படிப்பினை தருவதாக அமைந்துள்ளது.
-சி. ஹேமா ஆரோக்கியதாஸ், தேவகோட்டை.

நீங்கள் சுட்டிக் காட்டிய டிபரன்ஸ் பிட்வீன் டாட் காம் தளம் சென்று, தகவல்களைப் படித்து, என் பெயர் மற்றும் இமெயில் பதிந்தேன். தொடர்ந்து எனக்கு தகவல்கள் அனுப்பப் படுகின்றன. எவ்வளவு செறிந்த வேறுபாடுகள் உள்ளன என்று இப்போதுதான் தெரிகிறது. சாதாரண விஷயங்க ளிலிருந்து, தொழில் நுட்ப ரீதியான தகவல் வரை கிடைக்கின்றன. மாணவர்களுக்கும், கற்றுக் கொள்ளத் துடிப்போருக்கும் அருமையான ஒரு தளத்தைச் சுட்டிக் காட்டிய உங்களுக்கு நன்றி.
-பேரா. டி. நமசிவாயம், மதுரை.

விளையாடிப் பாருங்கள் டிப்ஸ் மிகவும் வேடிக்கையானதாக உள்ளது. இது மன அழுத்தத் தினைக் குறைப்ப தாகவும் உள்ளது.
-சி. கனகராஜ், கோத்தகிரி.

அப்டேஷன், வைரஸ் எதிர்ப்பு ஆகிய இரண்டு தகவல்களை கேள்வி பகுதி பிரிவில் நன்றாக விளக்கி, நாம் செய்தே ஆக வேண்டியதைக் குறிப்பிட்டுள் ளீர்கள். இதுவரை இருந்த சந்தேகம் நீங்கியுள்ளது.
-எஸ். ஜமுனா கணேஷ்,புதுச்சேரி.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a.thiyagarajan - salem,இந்தியா
29-மே-201108:16:35 IST Report Abuse
a.thiyagarajan since i am a reader of dinamalar newspaper and site ,i like to visit computer malar site ,as many useful datas are available for the beginners,since i am learned many from here ,hope that readers of dinamalar will get benifit of this article regards raj
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X