கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 மே
2011
00:00

கேள்வி: நான் பயர்பாக்ஸ் 3.6 பிரவுசர் பயன்படுத்தி வருகிறேன். எனக்கு ஜிமெயில் இதில் பெற்றுப் பயன்படுத்துவதில் இதுவரை எந்த பிரச்னையும் வந்ததில்லை. ஆனால் சில நாட்களாக, ஜிமெயில் சில நேரம் மட்டுமே திறக்கப்படுகிறது. பின்னர், கூகுள் காலண்டருக்குச் சென்று விடுகிறது. எத்தனை முறை மீண்டும் மீண்டும் ஜிமெயில் சென்றாலும், இதுதான் நேர்கிறது. எங்கு தவறு உள்ளது என்று தெரியவில்லை. கூகுள் லேப்ஸ் சென்று பார்த்ததிலும் ஒன்றும் புரியவில்லை. உதவவும்.
-கா. கலசலிங்கம், உடுமலைப்பேட்டை.
பதில்: இது பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஆட் ஆன் தொகுப்பு ஒன்றினால் ஏற்படும் பிரச்னை. அதன் பெயர் Integrated Gmail. ஜிமெயில் செயல்படும் தன்மையை முழுமையாக, கூகுள் அண்மையில் மாற்றியது. இது போல அடிக்கடி கூகுள் செயல்படும். இதனால், மேலே குறிப்பிட்ட ஆட் ஆன் தொகுப்பின் செயல்பாடு மாறத் தொடங்கிவிட்டது. இந்த பிரச்னையை, சம்பந்தப்பட்ட ஆட் ஆன் தொகுப்பு புரோகிராமினை எழுதியவர் தெரிந்து கொண்டுள்ளார். இதற்கான சீரமைப்பு புரோகிராம் இன்னும் வரவில்லை. எனவே, அதுவரை இந்த ஆட் ஆன் தொகுப்பு செயல் படுவதனை நிறுத்தி வைக்க வேண்டும். இதற்கு Tools கிளிக் செய்து, பின்னர் Add-ons கிளிக் செய்திடவும். டயலாக் பாக்ஸ் தோன்று கையில், Integrated Gmail ஆட் ஆன் தொகுப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அருகே உள்ள Disable பட்டனில் கிளிக் செய்திடவும். இனி, பயர்பாக்ஸை மீண்டும் இயக்கவும். இப்போது ஜிமெயில் ஒழுங்காகச் செயல்படும். மேலும் தகவல்களுக்கு http://www.snipca.com/x1834 என்ற முகவரியில் உள்ள இணையதளப் பக்கத்தினைக் காணவும்.

கேள்வி: நான் பிரிண்டரில் அச்சிட முயற்சிக்கையில், சிஸ்டம் டிரேயில், பலூன் பாப் அப் ஒன்று தோன்றி, நான் அச்சிடக் கொடுத்த வேலை குறித்து அறிவிக்கிறது. இது எரிச்சல் ஊட்டுவதாக அமைந்துள்ளது. மற்ற கம்ப்யூட்டர்களில் இது போன்ற செய்தி வரவில்லை. இது ஏன் ஏற்படுகிறது? நிறுத்துவதற்கான வழி என்ன? நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன்.
- டி. மரியதாஸ் அந்தோணி, மதுரை.
பதில்: இது போல சில அறிவிப்புகள் நமக்கு பிடிக்காதுதான். என்ன, இது கூட எனக்குத் தெரியாதா? ஏன் இந்த அறிவிப்பு என்று நம் மனம் எரிச்சலடையும். நீங்கள் குறிப்பிட்ட அறிவிப்பினைக் கீழ்க் குறிப்பிட்டவாறு செயல்பட்டால் நிறுத்தி விடலாம்.
1. ஸ்டார்ட் மெனுவில் Printers and Faxes என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Printers and Faxes டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
2. இந்த விண்டோவிற்குள்ளாக, பைல் மெனு கிளிக் செய்து Server Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. அஞீதிச்ணஞிஞுஞீ டேப் இதில் காட்டப்படுவதனை உறுதி செய்து கொள்ளவும்.
4. இங்கு Show Informational Notifications for Local Printers என்ற செக் பாக்ஸினைத் தேடி அறியவும். இதில் டிக் அடையாளம் இருந்தால், நீக்கிவிடவும்.
5. அடுத்ததாக, Show Informational Notifications for Network Printers என்ற செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத் தினையும் நீக்கிவிடவும்.
6. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
7. Printers and Faxes என்ற விண்டோவினையும் அடுத்து மூடவும். இனி எரிச்சலூட்டும் அறிவிப்புகள் இருக்காது.

கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், வேர்டில் ஏற்படுத்துவது போல லைன் பிரேக் எப்படி ஏற்படுத்துவது? கண்ட்ரோல் பிளஸ் என்டர் கொடுத்தால், கர்சர் தான் மேலும் கீழும் நகர்கிறது. வழி என்ன?
-கீதாலயன், கோவை.
பதில்: வேர்டில் இருப்பது போல லைன் பிரேக் ஏற்படுத்த ஷிப்ட் என்டர் பயன்படுத்தி இருப்பீர்கள். எக்ஸெல் தொகுப்பில் இது என்டர் கீயின் பயன்பாட்டிற்கு எதிரான செயல்பாட்டை மேற்கொள்ளும். அதாவது என்டர் அழுத்தினால் செல்லுக்குக் கீழே வரும் கர்சர், ஷிப்ட் + என்டர் அழுத்தினால் மேலே செல்லும். செல்லில் லைன் பிரேக் அமைத்திட Alt-Enter அழுத்தவும்.

கேள்வி: மால்வேர் புரோகிராம்களைக் கண்டறிந்து நமக்குச் சொல்ல புரோகிராம் ஒன்று தேவை. அதனை பிளாஷ் ட்ரைவில் வைத்து எடுத்துச் சென்று எந்த கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தும்படி இருக்க வேண்டும். தயவு செய்து அப்படி ஒன்று இருந்தால் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-கா. முத்தெழிலன், சிவகாசி.
பதில்: Super Anti Spyware Online Safe Scan என்னும் புரோகிராம் உங்கள் தேவையை நிறைவேற்றும். டாஸ் இயக்கத்தில் இயங்கும் புரோகிராம் போல இது செயல்படுகிறது. இதனை http://www.superan tispyware.com/onlinescan.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, அப்படியே பிளாஷ் டிரைவில் வைத்து இயக்கலாம். இதனை இயக்கியவுடன், நமக்கு ஒரு இன்டர்பேஸ் கிடைக்கிறது. அதன் மூலம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, மால்வேர் புரோகிராம்களைக் கண்டறியலாம். இது அவ்வப்போது அப்டேட் செய்யப்படுவது இதன் திறனைக் கூட்டுகிறது.

கேள்வி: என் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரை, நான்கு பேர் பயன்படுத்துகிறோம். எல்லாரும் நன்கு கற்றவர்களே. ஆனால் அவர்கள் இன்ஸ்டால் செய்து பின் நீக்கிவிடும் புரோகிராம்களில் சிறிய பைல்கள் மற்றும் ரெஜிஸ்ட்ரி வரிகள் நிறைய தங்கிவிடுகின்றன. தேடிச் சென்று அழிக்கவும் தயக்கமாய் உள்ளது. இது போன்ற தேவைப்படாத சிறிய புரோகிராம்கள் மற்றும் ரெஜிஸ்ட்ரி வரியில் தங்கிவிட்ட வரிகளை நீக்க ஏதேனும் புரோகிராம் உள்ளதா?
-எஸ். வசிஷ்ட ராஜன், சென்னை.
பதில்: உங்கள் கவலை நியாயமானது. அதே நேரத்தில், உங்கள் நீண்ட கடிதம், உங்கள் குடும்ப உறுப்பினர்களைக் குற்றம் சொல்லாத வகையில் உள்ளது வும் பாராட்டத்தக்கது. கம்ப்யூட்டரி லிருந்து நீக்கப்படும் புரோகிராம்கள் சார்ந்த வரிகள் ரெஜிஸ்ட்ரியில் இருந்தால், கம்ப்யூட்டர் செயல்பாடு நிச்சயம் மந்தமாகி, நம் பொறுமையைச் சோதிக்கும். இது போன்ற தேவையற்ற வரிகளையும், பைல்களையும் நீக்க Absolute Uninstaller என்ற புரோகிராம் கிடைக்கிறது. இதனை http://www. glarysoft.com/absoluteuninstaller/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இது ஆட்/ரிமூவ் மூலம் மேற்கொள்ளப் படும் செயல்பாடுகளை மேற்கொண்டா லும், அதனைக் காட்டிலும் கூடுதல் திறனுடன் செயல்படுகிறது. தேவையற்ற ரெஜிஸ்ட்ரி கீகள், சார்ந்த டெஸ்க்டாப் ஐகான்கள், ஸ்டார்ட் மெனுவில் எழுதப்பட்ட என்ட்ரிகள் ஆகியவற்றைக் கண்டறிந்து நீக்குகிறது.
இந்த புரோகிராம், சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை நீக்கும்போது, அழிக்காமல் விடப் படும் பைல்களைக் கண்டறிந்து முழுமையாக அழிக்கிறது. தானாகவே தேவையற்ற பைல் எண்ட்ரிகளின் இடமறிந்து காட்டுகிறது.
இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம் களை, அவற்றிற்கான ஐகான்களுடன் தெரிவிக்கிறது. இதன் மூலம் நாம் நீக்கப்பட வேண்டிய புரோகிராம்களை எளிதாகத் தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுக்கும் வகையில் அவற்றின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தி, பின் நீக்குவதற்கான கட்டளை கொடுத்தால், மொத்த மாக, அவற்றின் சுவடே இல்லாமல் நீக்குகிறது.
பொதுவாக ஆட்/ரிமூவ் புரோகிராம் செயல்பட சற்று நேரம், பிடிக்கும். அப்ஸல்யூட் அன் இன்ஸ்டாலர் மிக வேகமாகச் செயல்படத் தொடங்குகிறது. அத்துடன் இதன் இன்டர்பேஸ் மிக எளிதாக இதனை இயக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.

கேள்வி: சில புரோகிராம்களில் நம் ஆப்ஷன் தேர்வு செய்த பின் இறுதியில் அப்ளை மற்றும் ஓகே பட்டன்கள் தரப்பட்டுள்ளன. இதில் இரண்டையும் கிளிக் செய்திட வேண்டுமா? எதனை முதலில் கிளிக் செய்திட வேண்டும்? அல்லது ஏதேனும் ஒன்றைக் கிளிக் செய்தால் போதுமா?
-மு.சகாபுதீன், மேலூர்.
பதில்: புரோகிராமில் மாற்றங்களை ஏற்படுத்திய பின் ஓகே கிளிக் செய்தால், மாற்றங்கள் செயல்பாட்டிற்குக் கிடைக்கும். எனவே அப்ளை பட்டனைக் கிளிக் செய்திட வேண்டியதில்லை. அப்படியானால் அப்ளை பட்டன் எதற்கு? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். நீங்கள் டெஸ்க்டாப் தீம், கலர் மாற்றம், ஸ்கிரீன் ரெசல்யூசன், ஆகியவற்றில் மாற்றம் செய்து அந்த மாற்றத்தை நீங்கள் முதலில் பார்க்க வேண்டும் என எண்ணினால் அப்ளை பட்டனில் கிளிக் செய்தால் நீங்கள் ஏற்படுத்திய மாற்றத்தைப் பார்க்கலாம். இதில் உங்களுக்குச் சம்மதம் இல்லை என்றால் மீண்டும் மாற்றி, அப்ளை கிளிக் செய்து, அனைத்தும் முடிந்த பின்னர் ஓகே கிளிக் செய்திடலாம். சிலர் அனைத்து மாற்றங்களுக்கும், அப்ளை கிளிக் செய்த பின்னரே ஓகே கிளிக் செய்தால் பாதுகாப்பானது என்று எண்ணுகிறார்கள். அப்படியும் செய்திடலாம். அதில் தவறேதும் இல்லை.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்புளோரர் விரித்து ட்ரைவ் மற்றும் போல்டர்களைப் பார்க்கையில், பிளஸ் மற்றும் மைனஸ் அடையாளங்கள் தென்படுகின்றன. இவை எதனைக் குறிக்கின்றன?
-க.இளமாறன், மதுரை.
பதில்: நல்ல கேள்வி. பெரும்பாலான வர்கள் இதனைக் கவனித்திருக்க மாட்டார்கள் என்று எண்ணுகிறேன். போல்டருக்குள் சில போல்டர்கள் இருந்தால் அதன் முன் + அடையாளம் இருக்கும். உள்ளே உள்ள போல்டர்களை விரித்துப் பார்த்தால், உடன் + அடையாளம் மைனஸ் ஆக மாறிவிடும். உள்ளே உள்ள போல்டர்களுக் குள்ளாக, இன்னும் சில போல்டர்கள் இருப்பின் இந்த + அடையாளம் தொடரும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X