தேவையான பொருட்கள்
பச்சிரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
கேரட் - 1
பீன்ஸ் - 8
முருங்கைக்காய் - 1
கத்திரிக்காய் - 2
வாழைக்காய் - பாதி அளவு
உருளைக்கிழங்கு - 1
தக்காளி - 3
சாம்பார் பொடி - 3 டீ ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மல்லித்தழை - சிறிதளவு
நெய் - சிறிதளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
புளி - நெல்லிக்காய் அளவு
செய்முறை
* அரிசி பருப்புடன் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, ஐந்து கப் நீர் சேர்த்து, நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கடுகு, உளுந்து தாளித்து, தக்காளி, காய்கறிகள் சேர்த்து வதக்கவும். பிறகு சாம்பார் பொடி, உப்பு, புளி கரைசல் சேர்த்து, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேக விடவும். காய்கறிகள் நன்றாக வெந்ததும், அதனுடன் சாதக் கலவை, நெய், கறிவேப்பிலை, மல்லித் தழை, ஆகியவற்றை சேர்த்த, நன்கு கிளறி இறக்கவும்.