தேவையான பொருட்கள்
கோதுமை ரவை - 1/2 கப்
பால் - 1 1/2 கப்
பொடித்த வெல்லம் - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 8
திராட்சை - 8
கிராம்பு - 1
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை
* கோதுமை ரவையை ஒரு டீ ஸபூன் நெய்யில் வாசம் வரும் வரை வறுத்து, ஒரு கப் தண்ணீரை சேர்த்து வேக வைக்கவும். நன்றாக வெந்ததும், அதில் பால் சேர்த்து, பால் வற்றும் வரை நன்கு கிளறவும். அவ்வப்போது கிளறி விடவும். அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
* பொடித்த வெல்லத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து சூடாக்கி, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி, கோதுமை ரவை கலவையோடு கலந்து கொள்ளவும். அதனுடன் பாதியளவு நெய், ஏலக்காய்த்தூள், கிராம்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
* மீதமுள்ள நெய்யில் முந்திரி, திராட்சை ஆகியவற்றை வறுத்து, கோதுமை ரவை கலவையோடு சேர்த்து கிளறவும்.