தாயை இழந்த கன்றுகளை பராமரிப்பது எப்படி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2020
00:00

மனிதர்களைப் போல கால்நடைகளுக்கும் அதன் தாய்ப்பாலே சிறந்த உணவு. பசு, குதிரை, பூனை, நாய் குட்டிகளை ஈனும் பொழுது தாயானது இறக்க நேரிட்டாலோ, தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்பட்டாலோ பசுவின் பாலே மாற்று உணவாகிறது.

இளங்கன்றுகளுக்கான உணவு
கன்று ஈன்ற வேறு பசுவின் சீம்பாலை சூடுபடுத்தாமல் தாயில்லா கன்றுகுட்டிக்கு அளிக்கலாம். அரைலிட்டர் காய்ச்சிய பாலுடன், 300 மில்லி தண்ணீர், அரைத்தேக்கரண்டி விளக்கெண்ணெய், ஒரு கோழி முட்டையை கலக்கி இளங்கன்றுக்கு ஒரு வேளை உணவாக கொடுக்க வேண்டும். இதுபோல ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம், கன்று பிறந்த 4 நாட்களுக்கு கொடுக்க வேண்டும். பிறகு உடல் எடையில் பத்தில் ஒரு பங்கு என்ற அளவில் ஒரு நாளைக்கு 3 முறையும், 2வது வாரத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை கொடுக்க வேண்டும். கன்றுகளுக்கு இரண்டு வார வயதில் அடர்தீவனம் மற்றும் இளம் பசும்புல் கொடுக்கலாம். கன்றுகளுக்கு மூன்று மாதமான பின் பாலை நிறுத்தி அடர்தீவனம், பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனம் கொடுக்கலாம்.

ஆட்டுக்குட்டியை வேறு தாயிடம் பால் குடிக்கச் செய்யலாம். பசும்பாலுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து காய்ச்சி பாலாடை நீக்கி பாட்டிலில் பால் கொடுக்கலாம். குட்டிகளுக்கு இரண்டாவது வாரத்தில் அடர்தீவனம் மற்றும் பசும்புல் அளிக்க வேண்டும். உயிருடன் உள்ள குட்டியுடன், தாயை இழந்த குட்டியையும் சேர்த்து உப்புக்குளியல் கொடுத்து மாற்றுத் தாயுடன் விடுவதன் மூலம் எது தன் குட்டி என தாயால் வேறுபடுத்த முடியாது. இதன் மூலம் தாயை இழந்த குட்டியை பராமரிக்கலாம்.

பன்றிகுட்டிக்கு முதல் வாரத்தில் 5 முதல் 6 முறை பசும்பால் கொடுக்க வேண்டும். கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி இரும்புச்சத்து ஊசி மருந்தை குட்டிகளுக்கு போட வேண்டும். பன்றிக்குட்டிகள் இருக்கும் இடத்தில் 60 வாட்ஸ் மின்சார விளக்கை எரிய விடுவதன் மூலம் தேவையான வெப்பம் கிடைக்கும்.

தாயை இழந்த குதிரை குட்டிக்கு 250 மில்லி பசும்பாலில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை கலந்து இரண்டு மணி நேர இடைவெளியில் முதல் மூன்று நாட்களுக்கு அளிக்க வேண்டும். ஒரு மாதம் ஆனவுடன் பாலில் சர்க்கரை சேர்ப்பதை நிறுத்தி விடலாம்.

நாய்குட்டிக்கு இரண்டு டேபிள்ஸ்பூன் பாலாடை, இரண்டு டேபிள்ஸ்பூன் தண்ணீர், ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்து முதல் ஏழு நாட்களுக்கு கொடுக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு பிறகு ஒரு முட்டையும் சேர்த்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அளிக்க வேண்டும். 500 கிராம் எடையுள்ள நாய்க்குட்டிக்கு ஒரு நாளைக்கு 90 கிராம் உணவு தேவைப்படும்.

பசும்பாலுடன் தண்ணீர், வைட்டமின் தாது உப்பு சொட்டு மருந்து 3 துளிகள் கலந்து பூனைகுட்டிக்கு கொடுக்க வேண்டும். மூன்று மாத வயது வரை, நாள் ஒன்றுக்கு 4 முறை உணவளிக்க வேண்டும். எந்த குட்டியாக இருந்தாலும் அளவுக்கு அதிகமான உணவு அளிக்கக்கூடாது.

- உமாராணி, பேராசிரியர்
கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையம் திருப்பரங்குன்றம்,
0452 - 2483 903.

Advertisement

 

மேலும் விவசாய மலர் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-செப்-202006:45:23 IST Report Abuse
ஆப்பு கன்னுகுட்டி செத்துப்போனா தோலை உரிச்சு வெக்கலை அடைச்சு தாயை ஏமாத்தலாம். தாய் செத்துப்போனா கன்னுக்குட்டியை ஏமாத்த முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X