கவிதைச்சோலை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2020
00:00

மஹாத்மாவே... மறுபடியும் பிறக்க வேண்டாம்!

அண்ணலே...
நீங்கள் போதித்த அஹிம்சை
அறவே ஒழிக்கப்பட்டு
கருவறை துவங்கி
கல்லறை வரை
வன்முறை மட்டுமே
வழக்கமாகி விட்டது!

அற வழி என்ற
உங்கள் கொள்கை மறந்து
குடிசை துவங்கி
கோபுரம் வரை
ஊழலும், கொள்ளையும்
கொடி கட்டி பறக்கிறது!

ஜாலியன் வாலாபாக்
படுகொலைக்காக
நீங்கள் உருவாக்கியது
ஒத்துழையாமை இயக்கம்
கொலைகளை வியாபாரமாக்கும்
வித்தையை ஒற்றுமையாக
செய்வது தான் இங்கே
வழக்கமாகி விட்டதே!

வெள்ளையனுக்காக
நீங்கள் உருவாக்கியது
வரி கொடா இயக்கம்
இல்லை என்ற நிலையிலும்
இன்று, நாங்கள் வரி கட்டாத
பொருட்களே இல்லை!

உப்புக்காக நீங்கள்
தண்டி யாத்திரை சென்றீர்கள்
தவறு செய்பவர்களை
ஒப்புக்கு கூட யாரும்
இங்கே தண்டிப்பதில்லை!

நீங்கள் பிறந்த
இந்த ஒரு நாளாவது
மதுவை மறப்போம்
புலாலை புறக்கணிப்போம்
என்பதெல்லாம்
உங்கள் மேல் கொண்ட அளவற்ற
மரியாதையால் அல்ல...
அளவில்லாமல் சாப்பிடத்தான்!

பொது நலம் இங்கே
குழி தோண்டி புதைக்கப்பட்டது
சுயநலம் மட்டுமே இங்கே
வாடிக்கையாகி விட்டது!

மஹாத்மாவே...
மறுபடியும் பிறந்து விடாதீர்கள்
நாடு முழுதும்
'நாதுராம் கோட்சே'க்கள் தான்
நடமாடுகின்றனர்!

வே. விநாயகமூர்த்தி,
சென்னை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chitra - Coimbatore,இந்தியா
01-அக்-202014:23:08 IST Report Abuse
Chitra சரிதான் மகாத்மா மட்டுமல்ல., நியாயமாக இருப்பவர்கள் யாருமே இவ்வுலகத்தில் பிறக்க ஆசை படுவதில்லை. ஏனென்றால் எங்குமே நியாயம், நீதி, நேர்மை இல்லை. அனைத்திலும் ஊழல், கொள்ளை. ஒரு குறிப்பிட்ட அளவு சம்பாதித்தால் போதுமானதே.. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது அவர்களுக்கு தெரியாதோ? தற்பொழுது கணக்கிட்டு பாருங்கள்., மதுவினால் மட்டும் எத்தனை பெண்கள் கணவர் இல்லாமல் வாழ்கிறார்கள் என்று?...
Rate this:
Cancel
Pushpa Agm......... - kallakurichi,இந்தியா
29-செப்-202012:03:51 IST Report Abuse
Pushpa Agm......... உண்மை ..... விடிவுக்காலமே வராது ... மதுவிலக்கு வந்தால் அனைத்தும் சரியாகிவிடும் .... ஆனால் நடக்காது, 99/100 பேர் அயோக்கியங்கள்..........
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
28-செப்-202022:35:00 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI மஹாத்மாவைத்து சிலையாக மதித்து போற்றத்தவறுவதில்லை. ஏட்டில் இருக்கும் அவரது கருத்துக்களும் அப்படியே அவர் சின்னதுரை சின்னதுரை போல் அப்படியே உள்ளது. அதை நம்பி வாழ்வில் கடைபிடிக்கவில்லை சேமித்து வைத்து பெருமைப்படுகிறோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X