இனி மணலில் விவசாயம் செய்யலாம் | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements
இனி மணலில் விவசாயம் செய்யலாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 அக்
2020
00:00

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியின் தாவரவியல் பேராசிரியர் ராஜேந்திரன். கல்லுாரியின் ரூரல் பயோ டெக்னாலஜி யூனிட் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி கொண்டிருக்கும் இவர், தற்போது கடற்கரை மணலிலும் விவசாயம் செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.
அவர் கூறியதாவது : ஆற்றுமணல், கடற்கரை மணலில் ஆர்கானிக் கார்பன் இருக்காது. இன்ஆர்கானிக் கார்பனால் பயனில்லை. இந்த மணலை கெட்டிப்படுத்துவதன் மூலம் உறுதியாக்கலாம். இதற்கு கடற்பாசியை பயன்படுத்த வேண்டும். நீலம், பச்சை, சிவப்பு, பிரெளன் என எந்த நிற கடற்பாசியையும் ஆய்வகத்தில் வேகவைத்து பேஸ்ட்டாக்கி மணலுடன் கலந்தால் கெட்டியாகி விடும். இதில் விதை போட்டு செடிகள் நடலாம். தண்ணீர் விடும் போது சற்றே இளகி நீரை உள்ளே உறிஞ்சும். களிமண் போல மீண்டும் இறுகிவிடாது. அதனால் செடியின் வேர்கள் சுவாசிக்க முடியும். இந்த தொழில் நுட்பத்தில் மணலுடன் ஆர்கானிக் கார்பன், தாதுஉப்புகள் சேர்க்கப்படுவதால் செடிகள் நன்றாக வளரும், என்றார்.
இவரிடம் பேச : 94439 98480.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X