கலையரசியின் கதை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2020
00:00

கலையரசி சரஸ்வதி பற்றி, நாம் அறியாத வித்தியாசமான கதை ஒன்றை, சரஸ்வதி பூஜையான இன்று தெரிந்து கொள்வோம்...
ஒருமுறை தேவர்களும், முனிவர்களும் கூடி, கல்வியில் சிறந்த ஒருவருக்கு, 'வித்வ தாம்பூலம்' எனும் பரிசு வழங்க முடிவு செய்தனர். சிறந்த கல்விமானான அவ்வையாருக்கு, அதை வழங்க எண்ணி, அவரிடம் தங்கள் முடிவைக் கூறினர்.
'இதை நான் ஏற்க மாட்டேன். புலவர் எனும் சொல், தேவர்களைக் குறிக்கும். அவர்களது தலைவன் இந்திரன், 'ஐந்திரம்' எனும் இலக்கண நுாலை வகுத்தவன். அவனிடம் இந்த விருதைக் கொடுங்கள், பொருத்தமாய் இருக்கும்...' என்றார், அவ்வையார்.
இந்திரனிடம் பரிசை நீட்டினர், பரிசுக்குழுவினர்.
'நானும் இதற்கு தகுதியுடையவன் இல்லை. இலக்கணம் எழுதியோருக்கு இப்பரிசைக் கொடுப்பதென நீங்கள் முடிவு செய்தால், 'அகத்தியம்' எனும் நுாலை உலகுக்கு அளித்த, அகத்தியருக்கு இதைக் கொடுங்கள்...' என்றான், இந்திரன்.
அவர்கள், அகத்தியரிடம் ஓடினர்.
'சாதாரண இலக்கண நுாலுக்கு வித்வ தாம்பூலமா... இதைப் பெறும் யோக்கியதை எனக்கில்லை. நீங்கள் உலகாளும் பரமேஸ்வரியிடம் செல்லுங்கள். ஞானத்தை நமக்கு போதிக்கும், அந்த தேவியே இதற்கு பொருத்தமானவள்...' என்றார், அகத்தியர்.
'அம்மா... அகத்தியரின் முடிவுப்படி, தங்களுக்கு இந்த விருதை அளிக்க வந்துள்ளோம். ஏற்றுக் கொள்ளுங்கள்...' என்றனர்.
கருணையுடன், 'குழந்தைகளே... இந்தப் பரிசை, என் நாயகரான சிவபெருமானுக்கே குருவாய் இருந்து உபதேசித்தானே என் மகன், முருகன். ஞானப்பண்டிதனான அவனிடம், இதைக் கொடுத்து விடுங்கள்...' என்றதும், 'ஆஹா... நம் தமிழ் தெய்வத்தை மறந்து விட்டோமே...' என்று, முருகனிடம் சென்றனர்.
'தேவர்களே... இந்தப் பரிசைப் பெறும் தகுதி எனக்கு இல்லை. நீங்கள் பிரம்மாவிடம் செல்லுங்கள். உயிர்களைப் படைப்பது எவ்வளவு பெரிய கலை. அவரே இந்தப் பரிசுக்கு தகுதியானவர்...' என்றார், முருகன்.
பிரம்மலோகத்திற்குள் புகுந்தனர், தேர்வுக்குழுவினர்.
'பிரம்மதேவா... வேதநாயகனும், உயிர்களைப் படைக்கும் கலை தெரிந்தவருமான உம்மையே சிறந்த கல்விமானாக தேர்வு செய்துள்ளோம். பெற்றுக் கொள்ளுங்கள் வித்வ தாம்பூலத்தை...' என்றனர்.
அவர், தன் அருகில் இருந்த சரஸ்வதியைப் பார்த்தார்.
'என் அன்பு மனைவி சரஸ்வதியே இவ்வுலகில் சகலகலாவல்லி. அவளது வீணை இசையின் முன், வேறு எதுவும் எடுபடுமா... அனைத்து ஏடுகளுக்கும் அதிபதி அவளே; வேதவல்லி என்று அவளை புகழ்கிறோமே... அவள் கலைமகள் அல்ல, கலை அரசி. இவளே, ஒரு வித்வ தாம்பூலம். அவளிடமே பரிசைக் கொடுங்கள்...' என, கண்ணசைத்தார்.
அந்த தாம்பூலத்தை ஏற்று, அருள்புரிந்தாள், கலைமகள்.
அவளுக்கு, தமிழகத்தில் ஒரு கோவில் உள்ளது. திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில், 30 கி.மீ., துாரத்தில் பூந்தோட்டம். இங்கிருந்து, 6 கி.மீ., துாரத்திலுள்ள கூத்தனுாரில் அவளைத் தரிசிக்கலாம்.
தி. செல்லப்பா

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X