தலைவிதியை மாற்ற முடியுமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2011
00:00

தலையெழுத்து, விதி என்பது பிரம்மாவால் எழுதப்படுகிறது. மனிதன் முதலான எல்லா ஜீவன்களுக்கும் ஆயுள் நிர்ணயம் செய்வதும் பிரம்மா தான். ஒவ்வொரு ஜீவனுக்கும் ஆயுள் எவ்வளவு என்று தலையில் எழுதி விடுவார். உடனே, அது எமலோகத்தில் சித்ரகுப்தனுடைய கணக்கு நோட்டில் பதிவாகி விடும்.
வருஷம், மாதம், தேதி தவறாமல் வந்து, அந்த உயிரை எடுத்துச் சென்று விடுவான் எமன். எமன் எப்படி வருவான், எப்படி ஜீவனை அழைத்துச் செல்கிறான் என்பது புரியாத புதிர். எப்படியோ நேரம் தவறாமல் வருகிறான்; அழைத்துச் சென்று விடுகிறான்.
குழந்தை பிறந்தால் ஜாதகம் எழுதி ஜோசியரிடம் காட்டுகின்றனர். ஆயுள் பாகம் எப்படி இருக்கிறது என்று கேட்கின்றனர். ஜாதகத்தை பார்த்து கணக்கு போட்டு, "ஜாதகனுக்கு தீர்க்காயுசு...' என்பார் ஜோசியர். தீர்க்காயுசு என்றால் என்ன? எழுபது, எண்பது வருஷம் இருந்தாலே தீர்க்காயுசு என்பர். ஆயுள் என்பது விதியைப் பொறுத்த விஷயம். அதைக் குறைவாகவோ, விருத்தி செய்யவோ வழியில்லை. விதி என்பது அவ்வளவு வலிமை வாய்ந்தது.தவம் செய்து கொண்டிருந்த முனிவரின் கழுத்தில் செத்த பாம்பை பரீட்சித்து மன்னன் போட்டதால், தட்சன் என்ற பாம்பு கடித்து மரிக்க வேண்டும் என்ற சாபம் பெற்றான் ராஜா. ஒரு ராஜா இப்படிப்பட்ட காரியத்தை ஏன் செய்தான்? விதிதான். தனக்கு தட்சனால் மரணம் என்று தெரிந்ததும் ஒரு மலையில் மிகவும் பாதுகாப்பாக உட்கார்ந்திருந்தான்.
ராஜாவுக்கு, தட்சனால் மரணம் ஏற்படப் போகிறது என்று எல்லாருக்கும் தெரிந்து விட்டது.
ராஜாவை, பாம்பு கடித்தால் அந்த விஷத்தை மந்திரத்தின் மூலம் இறக்கிவிட்டு, பரிசும், பணமும் பெறலாமென்ற எண்ணத்துடன், அரண்மனையை நோக்கி போய் கொண்டிருந்தார் மந்திர சாஸ்திரம் தெரிந்த ஒருவர். இவர் போவதை பார்த்த தட்சன், "ஓய்... இங்கே வாரும்...' என்று கூப்பிட்டான். தட்சனிடம் போனார்.
"இப்போது எங்கே போகிறீர்?' என்றான் தட்சன். "ராஜாவை, தட்சன் கடிக்கப் போகிறானாம். அவன் கடித்ததும் என் மந்திர சக்தியால் நான் விஷத்தை இறக்கி, ராஜாவை காப்பாற்றப் போகிறேன்...' என்றார் அவர்.
"அப்படி நீர் செய்தால் உமக்கு என்ன கிடைக்கும்?' என்று கேட்டான் தட்சன். "எனக்கு நிறைய பணமும், பரிசும் கிடைக்கும்...' என்றார் மந்திரவாதி. "சரி... ராஜா எவ்வளவு கொடுப்பாரோ, அதைப் போல் இரண்டு பங்கு நான் தருகிறேன். நீர் திரும்பிப் போய் விடும்...' என்றான் தட்சன்.
மந்திரவாதி (சாஸ்திர ஞானமும் உண்டு! தன் ஞான திருஷ்டியில் பார்த்தார். ராஜாவுக்கு, தட்சன் கடித்து மரணம் என்று தலைவிதி இருப்பது தெரிந்தது. ஓஹோ... விதி அப்படி இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்? முடியாது. அதனால், ராஜாவிடம் போய், மந்திரத்தால் பயன் ஏற்படாமல் திரும்பி வருவதை விட, இவன் கொடுக்கும் பொருளையும், பணத்தையும் பெற்று திரும்பி விடுவதே மேல் என்று எண்ணி, தட்சனிடம் பொருள், பணம் பெற்று திரும்பிப் போய் விட்டார்.
பிறகு, பரீட்சித்து மன்னனும், தட்சனால் கடிக்கப்பட்டு வைகுண்டம் சேர்ந்தார் என்பது புராணம். விதி எப்படியெல்லாம் வேலை செய்கிறது பாருங்கள்!
***
- வைரம் ராஜகோபால்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயஸ்ரீ ரவி - நடிக்,யூ.எஸ்.ஏ
31-மே-201121:20:54 IST Report Abuse
ஜெயஸ்ரீ ரவி Why is Srimad Bhagawatha saptaaha very auspicious? Is it because the hideous Daksha let Parikshit hear it in a week (from Sukabrahmam) ?
Rate this:
Cancel
நாராயணன் - அனகாபுத்தூர்சென்னை,இந்தியா
30-மே-201113:46:04 IST Report Abuse
நாராயணன் விதியை மதியால் வெல்லலாம் என்றும் ஒரு முதுமொழி உண்டல்லவா? ஆனால் "விதியை மதியால் வெல்லலாம் என்பதே விதி ஆனால் அந்த விதியை வெல்ல யாரால் முடியும்?"
Rate this:
Cancel
GOWSALYA - Denhelder,நெதர்லாந்து
30-மே-201101:08:53 IST Report Abuse
GOWSALYA பரீட்சித்து மன்னனின் விதி,முனிவரின் சாபத்தில் வந்தது.அதாவது,ஞான முனிவர்களின் சாபம்,இறைவனின் படைப்புகளை விடப் பெரியவை என்று சொல்வார்கள்.அதுதான்,பரீட்ஷித்துவின் விதி.ஆனால், விதியை மதியால் வெல்லலாம் என்றும் ஒரு முதுமொழி உண்டல்லவா?மனிதனின் விதி அப்படியல்ல,எந்த ஒரு ஜோசியராலும் ஒருவரின் ஜாதகத்தை சரியாக எழுத முடியாது.ஏனெனில்,ஒரு தாய்க்குத் தன் பிள்ளையின் பிறந்த நேரம் ....: மணி,நிமிஷம்,வினாடி.....சரியாகத் தெரியாது என்று ஒரு லண்டன் அறிஞர் சொல்லியுள்ளார்.ஒரு பெண்ணின் பிரசவ நேரத்தில்,தாதி தாயையும், சேயையும் காப்பாற்றும் பணியில் இருப்பாளே தவிர,சரியாக என்ன நேரம் என்று மணிகட்டைப் பார்க்கமாட்டாள்.அவள், மணிகட்டைப் பார்த்தால் ஒரு உயிர் போவது உறுதி.அந்த அறிஞரின் வாக்கை நானும் ஆமோதிக்கிறேன்.அதனால்,எந்த ஒரு மனிதனும்," விதியே " என்று எதையும்,அசட்டை செய்யாமல்,முயற்சி செய்து,அந்த விதியை," மதியால் " வெல்லலாம்.....நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X