புறக்கடை நாட்டுக்கோழி வளர்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2020
00:00

நாட்டுக்கோழி வளர்ப்பதால் கூடுதல் வருவாய் கிடைப்பதோடு வீட்டுக்குத் தேவையான முட்டை மற்றும் இறைச்சி கிடைக்கிறது. எளிமையான தீவன மற்றும் மேலாண்மை யுக்திகளைக் கடைபிடித்தால் நல்ல லாபம் பெறலாம்.

குறைந்த இடவசதி, முதலீடு
நாட்டுக்கோழிகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். 10--15 நாட்டுக்கோழிகள் வளர்ப்பதால் ஒரு நாளைக்கு 1 முதல் 1.2 கிலோ எரு கிடைக்கும். புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகளின் முட்டை மற்றும் இறைச்சியில் கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு கோழிகளின் மரபணு பண்புகளை உள்நாட்டு கோழி இனங்களின் மரபணு பண்புகளுடன் சேர்த்து தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழி இனங்கள் உருவாக்கப்படுகின்றன.
பல வண்ணங்களுடன் நாட்டுக்கோழி போலவே காட்சியளிக்கும் இவைகளிடம் அடைகாக்கும் குணம் இல்லை. ஆனால் அதிக முட்டைகள் இடும். இவற்றின் முட்டை மற்றும் இறைச்சியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நாட்டுக் கோழிகளைப் போன்றே இருக்கும்.
அதிக எடையும், அதிக கருவுறும் திறன் மற்றும் குஞ்சு பொரிக்கும் திறன் கொண்டவை.
வீட்டுக்கு பின்புறம் போதுமான இடவதி இருந்தாலோ அல்லது ஆழ்கூள முறையில் 10 - 20 நாட்டுக் கோழி அல்லது தரம் உயர்த்தப்பட்ட கோழிகளை வளர்க்கலாம் . ஒரு கோழி 140 முதல் 150 முட்டைகள் இடும். ஆழ்கூள முறையில் வளர்த்தால் 200 முட்டைகள் வரை உற்பத்தியாகும்.
முட்டை உற்பத்திக்கு முற்படும்போது மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே தரமான இனப்பெருக்கத்திற்கு ஏற்ற சேவல்களை தேர்வு செய்ய வேண்டும் முழுமையான மார்பு, சமமான நேரான முதுகு, கால்கள் கொண்டதாக இருக்கவேண்டும். இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். ஒரு சேவல் ஆறு முதல் எட்டு கோழிகளுடன் இனச்சேர்க்கைக்கு பயன்படுத்தலாம்.

புறக்கடையில் தீவன மேலாண்மை
கோழிகளுக்கு சமச்சீர் தீவனம் தரவேண்டும். குறிப்பாக மாவுச்சத்து, தாது சத்து, உயிர் சத்து மற்றும் புரதம் நிறைந்த கீரை வகைகள் மற்றும் கரையான்களை அளிக்கலாம். கோழி குஞ்சுகளுக்கு கரையானை உயிருடன் தீவனமாக கொடுக்கக் கூடாது.
அதிக எண்ணிக்கையில் முட்டையிடுவதற்கு 50 முதல் 60 கிராம் அடர் தீவனம் கூடுதலாக அளிக்கலாம். கால்சியம் சத்து குறைந்தால் தோல் முட்டைகள் இடும். கிளிஞ்சல்களை இரவில் ஊற வைத்து மறுநாள் வேகவைத்து ஒரு கோழிக்கு 4-5 கிராம் கொடுக்கலாம்.
50 நாட்களில் குடற்புழுநீக்க மருந்து கொடுக்கலாம். 50 நாட்களுக்கு முன்பாகவே அவற்றின் எச்சத்தில் குடற்புழுக்கள் இருந்தால் மருந்து கொடுக்கலாம். 3 மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். வெள்ளை கழிச்சல் மற்றும் அம்மை நோய் தடுப்பூசி போட வேண்டும்.
கழிச்சல் ஏற்பட்டால் வாழைத் தண்டு சாற்றை வெறும் வயிற்றில் கோழிகளுக்கு கொடுக்கலாம். குப்பை மேனி இலை, கீழாநெல்லி இலை, சீரகத்தை தீவனத்துடனோ அரிசி குருணை உடன் கலந்து கொடுத்தால் கழிச்சல் நோய் தீரும்.
- அருண்சங்கர் வலையங்குளம் கால்நடை உதவி மருத்துவர், மதுரை 96002 61626.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
29-அக்-202007:39:39 IST Report Abuse
Rangiem N Annamalai பதிவிற்கு நன்றி .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X