'கொரோனா' பிரச்னையால், பல நிறுவனங்களின் எதிர்காலமே கேள்விக்குறியான நிலையில், கிருமிநாசினி, முக கவசம் தயாரிக்கும் நிறுவனங்கள் வித்தியாசமாக யோசித்து, அதிகம் சம்பாதித்தன.
ஐரோப்பிய நாடான பிரான்சை மையமாக வைத்து செயல்படும், பிரபலமான பேஷன் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான, 'லுாயிஸ் உயிட்டன்' முக கவசங்களை வித்தியாசமான வடிவங்களில் தயாரித்து, கல்லா கட்டி வருகிறது.
சமீபத்தில் இந்த நிறுவனம் தயாரித்துள்ள முக கவசத்தின் விலை, ஒரு லட்சம் ரூபாய். முகத்தை மறைக்கும் விதமாக, 'பிளாஸ்டிக் தடுப்பு'டன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த முக கவசத்தை, 'ஹெல்மெட்' போல், தலையில் அணிந்து கொள்ளலாம்.
சூரிய வெளிச்சத்தால், முகத்தில் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான விசேஷமான தொழில்நுட்பமும், இந்த முக கவசத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். முக கவசமாக மட்டுமல்லாமல், தொப்பியாகவும் இதை பயன்படுத்தலாமாம்.
— ஜோல்னாபையன்