பேருந்து பயணத்துல தன்னோட இச்சையை தீர்த்துக்க உங்களை ஒருத்தன் தப்பா தொட்டா என்ன செய்வீங்க?
இறங்கி ஓடின அவனை நான் விரட்டிப் போனேன்; தப்பிச்சுட்டான். கேள்விப்பட்டேன்... அவன் ஒரு கொலைகாரனாம்; பேரு... ஆண்டப்பன்.
'இதை இப்படியே விட்டிரு மாதுரி'ன்னு என் தோழி சொன்னா; இன்னொருத்தி, 'கோவில் திருவிழா
வுல எனக்கும் இப்படி நடந்திருக்கு; பிரச்னை எதுக்குன்னு நான் ஒதுங்கிட்டேன்'னு சொன்னா! எனக்கும் பயமாதான் இருந்தது; ஆனாலும், 'ஆண்டப்பன் கன்னத்துல ஒரு அறை கொடுத்துட்டுதான் சாகணும்'னு உறுதியா இருந்தேன்.
என்னைப் பெண் பார்க்க வந்தவர்கிட்டே எனக்கு நடந்ததை சொன்னதும், 'இது சாதாரண விஷயம்; எனக்கு இதுல எந்த பிரச்னையும் இல்லை'ன்னு பெருந்தன்மையோட சிரிச்சுக்கிட்டே சொன்னார்.
'இது உங்களுக்கு பிரச்னையா இல்லாம இருக்கலாம்; ஆனா, எனக்கு பிரச்னை. அவனை தேடிப்பிடிச்சு நான் அடிப்பேன்'னு சொன்னதும் அவரோட பெருந்தன்மை காணாம போயிடுச்சு.
துரதிருஷ்டவசமா ஆண்டப்பனை என் கையால தண்டிக்க முடியலை. ஆனா, பேருந்துல என் கண் முன்னாடி ஒரு பொண்ணுகிட்டே தப்பா நடந்துக்கிட்டவனை செருப்பால அடிச்சேன்;
ஆத்திரத்துல, 'ஆண்டப்பா... ஆண்டப்பா'ன்னு கத்திக்கிட்டே அடிச்சேன். 'நான் ஆண்டப்பன் இல்ல... சதீஷ்'னு அவன் அழுதான்.
'எனக்கு ஆண்டப்பனும் சதீஷும் ஒண்ணுதான்டா!'
படம்: பிரதி பூவன்கோழி (மலையாளம்)