விவசாயி வெளிநாட்டு விவசாயி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2011
00:00

இந்தியாவில் பிறந்த விவசாயிகளே, தாங்கள் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்ள வெட்கப்பட்டு வரும் சூழ்நிலையில், வெளிநாட்டில் பிறந்த ஒருவர், நம் நாட்டிற்கு வந்து, 25 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி, தன்னை ஒரு விவசாயி என்று, எப்போதும் பெருமையுடனும் சொல்லிக் கொள்கிறார்.
அவர் பெயர் ஹெர்பர்ட். ஜெர்மன் நாட்டில் பிறந்து, அங்கேயே பட்டப்படிப்பை முடித்தவருக்கு, ஆன்மிகப் பாதை பிடித்துப் போனது. இந்தியா ஒரு ஆன்மிக பூமி என்பதை அறிந்து வந்தவர், நாடு முழுவதும் சுற்றி, கடைசியில் புதுச்சேரியில் உள்ள ஆரோவில் வந்தடைந்தார்.
இங்கேயே, இவர் தேடிய ஆன்மிகமும் கிடைத்தது; தேடாத புதிய பொறுப்பும் கிடைத்தது.
"செய்யும் தொழிலே தெய்வம்' என்று சொன்ன ஆரோவில் நிர்வாகம், இவரிடம், ஏழு ஏக்கர் நிலத்தை கொடுத்து, விவசாயம் பார்க்கும்படி கேட்டுக் கொண்டது. மிக உற்சாகமாக, "களம்' இறங்கியவர், இங்குள்ள விவசாயிகளே வியக்கும் வகையில் விவசாயத்தில் பல முன்னேற்றங்களை கண்டார்.
சேற்றில் இறங்குவது, களை எடுப்பது, பயிர் நடுவது, நீர் பாய்ச்சுவது, நாற்று நடுவது, உழுவது, அறுவடை செய்வது என்று எல்லாவற்றையும் படு உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் செய்ததன் எதிரொலி, இவரது நிலத்தில் எப்போதுமே அமோக விளைச்சல்தான்.
ரசாயனம் மிகுதியாகக் கொண்ட பூச்சி கொல்லி மருந்துகளால் மனிதர்களுக்கு கேடு என்பதால், இவரது வழி இயற்கை வழிதான். "ஆர்கானிக்' விவசாயம் எனப்படும் இவரது விவசாயத்தில், இயற்கையாக தயாரிக்கப்பட்ட உரங்களால் ஊட்டம் பெறுவது பயிர்கள் மட்டுமல்ல, இந்த பயிர்களை சாப்பிடும் மனித உயிர்களும்தான்.
தன்னை நேசித்த பெற்றோரையும், உற்றோரையும் விட, தான் நேசிக்கும் இந்த மண்ணே மேலானது என்ற வைராக்கியத்துடன் வாழும் ஹெர்பர்ட், சந்தேகமில்லாமல் இங்குள்ள விவசாயிகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறார்.
***
- எல். முருகேசன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharuman - Kolkata,இந்தியா
04-ஜூன்-201121:01:59 IST Report Abuse
Dharuman ஆன்மிகப் பாதையில் சென்றாலே இந்தப் புண்ணிய உலகத்தின் அருமை பெருமைகள் தெரிந்து விடும். இக் காரணத்தினாலே தான் ஜெர்மானியரும் இதைப் புரிந்து கொண்ட பின்னர் இங்கேயே தங்கி விவசாயத்தில் மற்றும் இயற்கை வாழ்வில் திருப்தியுடன் வாழ்கிறார். வாழ்க அரவிந்தர்! வாழ்க அன்னை!
Rate this:
Share this comment
Cancel
muthuselvi - chennai,இந்தியா
03-ஜூன்-201110:36:12 IST Report Abuse
muthuselvi கிரேட் வொர்க் ஹெர்பர்ட்..:)
Rate this:
Share this comment
Cancel
கோபால் - bangalore,இந்தியா
02-ஜூன்-201111:47:08 IST Report Abuse
கோபால் great inspiration
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X