விபத்து இல்லாமல் கார் ஓட்டி சாதனை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
விபத்து இல்லாமல் கார் ஓட்டி சாதனை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 மே
2011
00:00

நூறு வயதான நபர் ஒருவர், எண்பது ஆண்டுகளாக விபத்தே இல்லமால், கார் ஓட்டி சாதனை படைத்துள்ளார். அவரது இந்த சாதனையை பாராட்டி, அவருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம், பிரிமியம் தொகையில் தள்ளுபடி வழங்கியுள்ளது.
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இந்த டிரைவரின் பெயர் சிரில் டெலாகு. எண்பது ஆண்டுகளாக கார் ஓட்டி வருகிறார். தினமும், காரை எடுத்துக் கொண்டு கடைக்கு செல்வார்; மீன் மார்க்கெட்டிற்கு செல்வார். "நான் கார் ஓட்டும் போது, மணிக்கு, 40 கி.மீ., வேகத்திற்கு மேல் செல்ல மாட்டேன். என் பாதுகாப்புதான் எனக்கு முக்கியம். எனக்கு, 110 வயது ஆகும் வரை கார் ஓட்டுவேன்...' என்கிறார். இவருக்கு இன்சூரன்ஸ் தொகையில் எவ்வளவு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க, அந்நிறுவனம் மறுத்து விட்டது. எனினும், எண்பது ஆண்டுகளாக விபத்து காப்பீடு கேட்டு, மனுவே செய்யாததால், அதற்கு பரிசு நிச்சயம் உண்டு என்று மட்டும் அறிவித்துள்ளது.
— ஜோல்னா பையன்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X