சாம்சங் நிறுவனம், அதன், 'கேலக்ஸி எஸ் 21' ஸ்மார்ட்போனை, அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிமுகம் செய்துவிடும் என, சந்தையில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், என்.எப்.சி., சான்றிதழையும் அது பெற்றுவிட்டது. ஒரு போன் தயாரிப்பு, இந்த நிலைக்கு வந்துவிட்டால், விரைவில் அறிமுகம் ஆகிவிடும். அந்த வகையில்,'கேலக்ஸி எஸ் 21' வகை போன்களின் அறிமுக நேரமும் நெருங்கி விட்டது என்றே கருதலாம்.
இந்த போன், 'அமோல்டு 2 எக்ஸ்' திரையுடனும் 5,000 எம்.ஏ.எச். பேட்டரி திறனுடன் வரும் என்கிறார்கள். மேலும், 6.8 அங்குல திரை கொண்டதாகவும், 108 மெகா பிக்ஸல் கேமராவுடன் வர இருப்பதாகவும், உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.