தேவையான பொருட்கள்
பசும்பால் - 5 லிட்டர்
சர்க்கரை - 5 கிலோ
கோவா - 200 கிராம்
வினிகர் - 3 மேஜை கரண்டி
ஏலக்காய் பொடி - 1 மேஜை கரண்டி
சோள மாவு - 75 கிராம்
தண்ணீர் - 4 லிட்டர்
செர்ரி பழங்கள் - 50 கிராம்
செய்முறை
பசும்பாலை காய்ச்சி ஆறவைக்கவும். வினிகரில், 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து பாலில் விட்டு, பாலை திரிக்கவும். திரிந்த பாலில், 3 லிட்டர் தண்ணீர் சேர்த்து பருத்தி துணியில் வடிகட்டவும். வடிகட்டியில் உள்ளதை தண்ணீர் போக பிழிந்து எடுத்து தாம்பாளத்தில் போட்டு, கையில் அழுத்தி தேய்க்கவும். மிருதுவானவுடன் சோள மாவு, ஏலக்காய் பொடி சேர்த்து, அரை அங்குல கொழுக்கட்டை போல பிடித்து வைக்கவும்.
சர்க்கரையில், 60 கிராம் தண்ணீர் சேர்த்து கொதிக்கும் போது சிறிது பால் சேர்த்தால் அழுக்கு பிரிந்து வரும் அதை எடுத்துவிட்டு, பாகில் நாம் ஏற்கனவே பாலை வடிகட்டிய தண்ணீரை சேர்க்கவும்.
இப்போது ஜீரா பொங்கி வரும். அடுத்து நாம் பிடித்து வைத்துள்ள உருண்டைகளை சேர்க்கவும். நாம் போட்ட உருண்டைகள் வாணலியில் அடியில் போய் உட்கார்ந்தவுடன், ஜீராவில் சிறிது தண்ணீர் சேர்த்து இறக்கவும். 2 மணி நேரம் ஊறியவுடன் சம்பகலிகளை எடுத்து, நடுவில் லேசாக கீறி கொஞ்சம் கோவா வைத்து அழுத்தி, அதன் மேல் செர்ரி பழங்களை வைத்து அலங்கரிக்கவும்.