தேவையான பொருட்கள்
கடலை மாவு - 600 கிராம்
சர்க்கரை - 1.750 கிலோ
நெய் - 2 லிட்டர்
தண்ணீர் - முக்கால் லிட்டர்
செய்முறை
கடாயில் சர்க்கரை போட்டு, முக்கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும், கடலை மாவை சேர்க்கவும். மிதமான தீயில் கைவிடாமல் கிளறவும். நெய் அரை லிட்டர் வீதமாக, மூன்று முறை சேர்த்து கிளறி, மைசூர் பாகு பதம் வந்ததும் அடுப்பை அணைத்து, கடைசியாக அரை லிட்டர் நெய் சேர்த்து, நெய் தடவிய தட்டில் பரப்பவும். மூன்று மணி நேரத்திற்கு பின், விரும்பிய வடிவில் துண்டுகள் போடலாம்.