தேவையான பொருட்கள்
மைதா மாவு - 1.5 கிலோ
எண்ணெய் - 50 மில்லி
அரிசி மாவு - 500 கிராம்
எள்ளு - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
கருவேப்பிலை - சிறிது
மிளகாய் துாள் - 30 கிராம்
தண்ணீர் - முக்கால் லிட்டர்
எண்ணெய் பொரித்தெடுக்க
செய்முறை
எண்ணெயை தவிர எல்லா பொருட்களையும் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து, சிறிய டைமண்ட் வடிவில் வெட்டி கொள்ளவும். இவற்றை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.