தேவையான பொருட்கள்
மைதா - 1 கிலோ
சர்க்கரை - 1 கிலோ
டால்டா - 400 மி.லி.,
தண்ணீர் - 400 மி.லி.,
சோடா உப்பு - 2 சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
மைதா மாவில் சோடா உப்பு சேர்த்து திட்டமாக தண்ணீர், டால்டா கலந்து கெட்டியாக பிசையவும். சப்பாத்தி மாவு பதத்தைவிட மிருதுவாக இருக்க வேண்டும். இந்த மாவை பாதுஷாக்களாக செய்து எண்ணெயில் பொரித்தெடுத்து ஆற வைக்கவும். சர்க்கரையை சிறிது தண்ணீர் சேர்த்து ஜீரா காய்ச்சி இறக்கவும். ஜீரா மிதமான சூட்டில் ஆறியதும், பாதுஷாவை அதில் போட்டு, அரை மணி நேரத்திற்கு பின் எடுத்து அடுக்கவும்.