தேவையான பொருட்கள்
கடலை மாவு - 1 கிலோ
அரிசி மாவு - அரை கிலோ
மிளகு - 100 கிராம்
சீரகம் - 50 கிராம்
ஓமம் - 25 கிராம்
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
மாவு பிசைய எண்ணெய் - 200 கிராம்
மற்றும் பொரித்தெடுக்க எண்ணெய்.
செய்முறை
பூண்டை நைசாக அரைத்து, மிளகு, சீரகம், சொரசொரப்பாக அரைத்து, ஓமம், உப்பு, 200 கிராம் எண்ணெய் ஆகியவற்றை மாவில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். அடுப்பில் எண்ணெய் வைத்து மிதமான சூட்டில் மாவை அச்சில் பிழிந்து, வேகவிடவும். பின் அடுப்பை அதிகசூட்டில் வைத்து எண்ணெய் பொங்கி வரும்போது, காரா சேவை எடுக்கவும்.