தேவையான பொருட்கள்
சம்பா கோதுமை - 1 கிலோ
சர்க்கரை - 4 கிலோ
முந்திரி - 75 கிராம்
நெய் - 1.5 லிட்டர்
தண்ணீர் - 1 லிட்டர்
செய்முறை
சம்பா கோதுமையை, ஏழு மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் தண்ணீர் முழுதும் சேர்த்து அரைத்து, பால் எடுத்து, வடிகட்டி வைக்கவும். இந்த பாலை, 10 மணி நேரம் புளிக்க வைக்கவும். பின் மேலே உள்ள தண்ணீரை வடித்துவிட்டு, கீழே இருக்கும் பாலை, துணியில் மீண்டும் வடிக்கவும். இவ்வாறு செய்யும் போது நமக்கு, 1 லிட்டர் கோதுமை பால் கிடைக்கும். இதை அடுப்பில் ஏற்றி, சர்க்கரை சேர்த்து, கைவிடாமல் கிளறவும்.
அரை மணி நேரத்தில் முக்கால் பங்காக இறுகி வரும். அப்போது நெய்யை சிறிது சிறிதாக கலந்து கிளறவும். மீண்டும் நெய் பிரிந்து மேலே வரும்போது, முந்திரியை சேர்க்கவும். பின் சிறிது கையில் எடுத்து பார்த்தால், ஒட்டாமல் லேசாக அமுங்கும். திருநெல்வேலி அல்வா ரெடி.