செய்யத்தேவையானவை
பால் ஒரு லிட்டர்
நெய் 100 கிராம்
சீனி 40 கிராம்.
செய்முறை
பாலை காய்ச்சி கொதித்து வரும் போது சீனி சேர்த்து கிளறவேண்டும். அவ்வப்போது நெய் சேர்த்து விடாமல் கிளற வேண்டும். கெட்டிப்பதம் வரும் போது இடையிடையே நெய் சேர்க்க வேண்டும். தேவைக்கு அதிகமாக ஊற்ற வேண்டியதில்லை. கெட்டிப்பதம் வந்து விட்டால் நெய் ஊற்றவேண்டாம். இதை உயரமான சட்டியில் ஊற்றி இரவு முழுக்க ஆற விட வேண்டும். மறுநாள் காலையில் வெட்டி
பரிமாறலாம். சிறுதுண்டு வாயில் வைத்ததும் ஸ்வீட் கரைந்து எச்சில் ஊறவைக்கும். வேறெந்த கலப்படமும் இல்லாத ஸ்வீட்டை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.