செய்யத்தேவையானவை
மைசூர்பருப்பு ஒரு கிலோ
பாசிப்பயறு 250 கிராம்
ரெடிமேட் காரப்பொடி
உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப.
செய்முறை
பாசிப்பயறு, மைசூர் பருப்பை தனித்தனியாக முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் தண்ணீர் வடியவிட வேண்டும். ஈரப்பதம் குறைந்தபின் எண்ணெயில் இட்டு பொறிக்க வேண்டும். இவற்றுடன் சேவ் (பெரிய ஓமப்பொடி), உப்பு, காரம் சேர்த்து கிளறவேண்டும்.
முந்திரிபருப்பு, கறிவேப்பிலை வறுத்து மேலே அலங்கரிக்கலாம்.
இதற்கென ரெடிமேட் மசாலா கடைகளில் கிடைக்கிறது. அதை பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.