செய்யத் தேவையானவை: கடலைமாவு, நிலக்கடலை, கொண்டைக்கடலை, கடலைபருப்பு, உப்புதண்ணீர், எண்ணெய், ரெடிமேட் மசாலா.
செய்முறைகடலைமாவை தேவைக்கேற்ப எடுத்து உப்பு சேர்க்காமல் தண்ணீர் விட்டு பிசைந்து சேவ் (பெரிய ஓமப்பொடி) போல பெரிய ஜாரா வழியாக எண்ணெயில் இட்டு பொறிக்க வேண்டும். இதே போல காராபூந்திக்கும் கடலைமாவை தண்ணீர் விட்டு உப்பு சேர்க்காமல் பிசைந்து அரிகரண்டியில் விட்டு எண்ணெயில் பொறிக்க வேண்டும். இரண்டாக உடைத்த கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் தண்ணீர் வடித்து பொறிக்க வேண்டும். நிலக்கடலை மற்றும் கடலைபருப்பை தனித்தனியாக பொறிக்க வேண்டும். சேவ், காராபூந்தி, நிலக்கடலை, கொண்டைக்கடலை, கடலைபருப்பு, உப்பு, ரெடிமேடு மசாலா சேர்த்து கிளற வேண்டும். மாலை நேரத்தில் ஸ்வீட் உடன் மிக்சர் சாப்பிட சுவையாக இருக்கும்.