பிளாபங்ட் நிறுவனம், புதிதாக,'பிளாபங்ட் பிடிடபுள்யு ஏர்' எனும், ட்ரூ ஒயர்லெஸ் இயர்போனை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது நிறுவனத்தின் சகாய விலை ஆடியோ சாதனங்கள் வரிசையில், இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தண்ணீர் புகுவதை தடுக்கும் வசதி, டச் கண்ட்ரோல் வசதி, குரல்வழி உத்தரவுகளை பிறப்பிக்க உதவும் ஸ்ரி, கூகுள் அசிஸ்டென்ட் ஆகியவையும் இதில் உள்ளன. சார்ஜிங் கேஸுடன், 15 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் வகையிலான பேட்டரியும் இதில் உள்ளது.
விலை: 3,990, அறிமுக விலை: 2,999