தேவையான பொருட்கள்:ஒரு கப் தினை, ஒரு கப் அரிசி மற்றும் கோதுமை ரவை, துருவிய தேங்காய், ஒரு கப் வெல்லம், ஒரு வாழைப்பழம், அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா, தேவையான அளவு உப்பு, எண்ணெய் மற்றும் நெய்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி தினை, அரிசி மாவு, கோதுமை ரவையை கலக்க வேண்டும். அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி, உப்பு, வாழைப்பழம் போட்டு பிசைய வேண்டும். அதில் வெல்லம் கலந்து ஊற வைக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு பின் சோடா சேர்த்து பிசைந்து பணியாரம் ஊற்றும் பக்குவத்திற்கு தயார் செய்ய வேண்டும். பிறகு பணியார சட்டியில் நெய், எண்ணெய் மற்றும் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றினால் தித்திக்கும் பணியாரம் தயார்.