தேவையான பொருட்கள்:
குதிரைவாலி, தினை உள்ளிட்ட சிறுதானிய மாவு அரை கப், கால் கப் பொரிகடலை மாவு, கால் கப் உளுந்து மாவு, தேவையான பெருங்காயம், ஓமம், சீரகம் மிளகு அல்லது மிளகாய் வத்தல், உப்பு, வெள்ளை எள், தேவையான அளவு தேங்காய் எண்ணெய், வெண்ணெய்
செய்முறை:ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அனைத்து மாவையும், சீரகம், மிளகு, உப்பு, ஒரு கரண்டி தேங்காய் எண்ணெயும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். சட்டியில் எண்ணெய் காய்ந்ததும் அதில் சுற்றி வைத்த மாவை போட்டு மிதமான தீயில் முறுக்குகளை பொரித்தெடுக்கலாம்.