தேவையான பொருட்கள்:500 கிராம் சிறுதானியங்கள், அரை லிட்டர் பால், 250 கிராம் சோயா பீன்ஸ், அரை கப் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், தேவையான அளவு எண்ணெய், 2 டீஸ்பூன் கொத்தமல்லி துாள், 1 டீஸ்பூன் சாட் மசாலா, தேவையான அளவு கரம் மசாலா, காஷ்மீர் சிவப்பு மிளகாய், ஒரு பெரிய வெங்காயம், குடை மிளகாய், எலுமிச்சை, தேவையான அளவு உப்பு.
செய்முறை:சிறுதானியங்கள், சோயா பீன்ைஸ 2-5 மணி நேரம் வரை ஊற வைத்து, அரைத்து பால் எடுக்கவும். கொதிக்க வைத்த பாலுடன் அரைத்த பாலை சேர்த்து தேவையான பக்குவத்திற்கு கொதிக்க வைத்து 'வினிகர்' அல்லது எலுமிச்சம் சாறு சேர்க்கவும். சிறிது நேரத்தில் பால் திரிந்து திரி திரியாக வரும். திரிந்த பாலை ஒரு துணியில் வடிகட்டினால் தேவையான 'பனீர்' கிடைக்கும். அதை சமநிலைப்படுத்தி சதுர வடிவில் மாற்றவும்.ஒரு பாத்திரத்தில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, உப்பு, கொத்தமல்லி துாள், சாட் மசாலா, உப்பு சேர்த்து எலுமிச்சை சாறு ஊற்ற வேண்டும். அதனுடன் கொத்தமல்லி, புதினா இலைகள், குடை மிளகாய், மிளகு மற்றும் பனீர் துண்டுகளை சேர்த்து நன்றாக கலக்கவும். குறைந்தபட்சம் 3 மணி நேரம் குளிர வைக்க வேண்டும்.பின் ஒரு நீள குச்சியில் ஊற வைத்த பனீரை சொருகி அதன் மேல் வெங்காயம், குடை மிளகாயை அடுக்க வேண்டும். இதே போல் குச்சி முழுவதும் வைத்து வெப்ப அடுப்பில் (மைக்ரோ ஓவன்) வைத்து சூடாக்கினால் பன்னீர் டிக்கா தயார். அதன் மீது சாட் மசாலா துாவி, கொத்தமல்லி, புதினா சட்னியுடன் பரிமாறலாம்