'போல்டபிள்' போன்கள் மற்றும், 'மல்டி ஸ்கிரீன்' போன்கள் போன்றவற்றுக்கான வரவேற்பு சந்தையில் நன்றாக இருப்பதால், எல்.ஜி., நிறுவனம், அடுத்து ஒரு புதிய திட்டத்தில் இறங்கி இருக்கிறது. இந்த புதிய போனில் திரை சுருட்டக் கூடிய வகையில் இருக்கும் என்கிறார்கள்.
மெயின் திரையிலிருந்து பக்கவாட்டில் இழுத்து, பெரிதாக்கி கொள்ளும் வகையில் புதிய, ரோலபிள் போனை தயாரித்து வெளியிடும் முயற்சியில் இறங்கி இருக்கிறது, எல்.ஜி., நிறுவனம். கடந்த மாதம் இந்நிறுவனம், அதன் 'எல்.ஜி., விங்' எனும் இரண்டு திரை கொண்ட போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய, 'ரோலபிள் போன்' அடுத்த ஆண்டு இறுதி வாக்கில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.