நாய்ஸ் நிறுவனம், இந்தியாவில் புதிதாக,'நாய்ஸ் ஏர்பட்ஸ்' ட்ரூ ஒயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. டச் கன்ட்ரோல், குரல்வழி உத்தரவு ஆகிய வசதிகளுடன், நான்கு மணி நேரம் நீடிக்கும் வகையிலான பேட்டரியுடன், இந்த புதிய இயர்போன் அறிமுகம் ஆகியுள்ளது.
ஒரே ஒரு வண்ணத்தில் மட்டுமே அறிமுகம் ஆகியிருக்கும் இந்த இயர்போன், டைப் சி போர்ட் மூலமாக சார்ஜ் ஏற்றும் வசதி கொண்டதாக இருக்கிறது. மேலும், 13மி.மீ., டிரைவர்களுடன், 5.0 புளுடூத் இணைப்பு வசதியும் கொண்டுள்ளது.
இதன் சார்ஜிங் கேஸில், 500 எம்.ஏ.எச்., பேட்டரி இருப்பதால் கூடுதலாக, 16 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். இந்த இயர்பட்ஸ் எடை, 4.5 கிராம் ஆகும்.
விலை: 2,499 ரூபாய்.