வி.யு., பிராண்டின் புதிய டிவி ஒன்று அறிமுகம் ஆகியுள்ளது.'வி.யு., மாஸ்டர்பீஸ் டிவி' எனும் இந்த டிவி, 85 அங்குலம் அளவு கொண்டது. 4கே.எச்.டி.ஆர்., கியு.எல்.இ.டி., பேனல் உடன் வந்துள்ளது. கூடுதல் சிறப்பம்சமாக, 50 வாட் சவுண்டு பார், டிவியுடன்,'பில்ட் இன்' ஆக வழங்கப்பட்டுள்ளது.'டால்பி விஷன்' சப்போர்ட் செய்யும்.
இதை விட சுவாரஸ்யமான அம்சம், இந்த டிவி,'விண்டோஸ் 10 ' பில்ட் இன் உடனும் கிடைக்கிறது. இது,'இன்டெல் கோர் ஐ5 பிராசஸர்' கொண்டது. தேவையெனில், இந்த கூடுதல் அம்சத்துடன் வாங்கிக்கொள்ளலாம். காணொலி கூட்டங்களுக்காக கேமராவும் இணைக்கப்பட்டு வருகிறது.
'ஆண்ட்ராய்டு 9 பை' இயங்குதளம் கொண்ட, ஸ்மார்ட் டிவியாகும் இது. மொத்தம், 6 ஸ்பீக்கர் சிஸ்டம் கொண்ட இதன் சவுண்டு பார்,'டால்பி எம்.எஸ்., 12' மற்றும், 'டி.டி.எஸ்:எக்ஸ் பார்மெட்டுகளை சப்போர்ட் செய்யும்.
விலை: 3,50,000 ரூபாய்.