எல்லாரும் சொல்லும் மந்திரம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2020
00:00

தீட்சை பெற்றவர்களும், வேதம் கற்றவர்களும் மட்டுமே மந்திரங்களை உச்சரிக்க கடமைப்பட்டவர்கள். ஆனால், எல்லாரையும் மந்திரம் சொல்ல வைத்த பெருமை, கந்தசஷ்டி கவசம் எழுதிய தேவராய சுவாமியைச் சேரும். குறிப்பாக, கந்தசஷ்டி விரத நாட்களில், இந்த மந்திரத்தைச் சொல்வது மிக மிக புண்ணியத்தை தரும்.
கடற்கரை தலமான திருச்செந்துார் உள்ளிட்ட ஆறுபடை வீடுகளிலும், நம் ஊரிலுள்ள முருகன் கோவில்களிலும் அமர்ந்து, கவசம் பாடும் போது, பாதுகாப்பு உணர்வை அடையலாம். மனதிற்கு நம்பிக்கையும், உற்சாகமும் தரக்கூடிய கந்தசஷ்டி கவசத்தில், குறிப்பிட்ட சில மந்திரச் சொற்கள் உள்ளன.
இதில்,
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்,
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்.
கிலியும் சௌவும் கிளரொளி ஐயும்
நிலைபெற்று என் முன் நித்தமும் ஒளிரும்
என்ற வரிகள் வருகின்றன. இதன் பொருள் பலருக்கும் தெரிவதில்லை.
ஐயும்(ஐம்), கிலியும் (க்லீம்) சௌவும் (ஸௌம்) ஆகியவை, 'பீஜாக்ஷரங்கள்' எனப்படும். இதை, பீஜம் + அட்சரம் என, பிரிப்பர். 'பீஜம்' என்றால், உயிர்ப்புள்ள விதை. 'அட்சரம்' என்றால், எழுத்து.
'உயிர்ப்புள்ள எழுத்து விதைகள்' ஒன்று சேர்ந்தால் அது, 'மந்திரம்' ஆகிறது. அந்த மந்திர விதைகள், நம் மனதில் துாவப்பட்டால், அது வளர்ந்து பக்தியின் உச்சத்தை எட்ட முடியும். பக்தியின் உச்சத்துக்குச் செல்பவன், கடவுளின் திருவடியை அடைவான்.
'ஐம், க்லீம்' என்ற மந்திர எழுத்துக்களும், உயிர்களை உய்விக்கும் ஒளிபொருந்திய, 'ஸௌ' என்ற மந்திர எழுத்தும், எழுச்சி மிகுந்த ஒளிமயமான ஐயும்...
இப்படி பல்வேறு முறைகளில் ஓதப்பெறும் ஆறெழுத்து மந்திரத்தின் மூலாதார எழுத்துக்குரிய, 'நாத தத்துவமாய் விளங்கும் ஆறுமுகனே... என் மனக்கண் முன், தினமும் நிலையாக நின்று ஒளிர வேண்டும்...' என்பது, இந்த வரிகளின் பொருள்.
முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரமான, 'சரவணபவ' என்பதை, யார் வேண்டுமானாலும் சொல்லலாம், இதை, 'ஓம் ஐம் சரவணபவாய நம, ஓம் க்லீம் சிகாயை வஷட், ஓம் ஸௌம் சுப்ரமண்யாய நமஹ' என்று மந்திரங்களுடன் சேர்த்துச் சொல்லும்போது, அதன் சக்தி மிக மிக அதிகமாகிறது. ஆனால், இதை எல்லாரும் சொல்லக் கூடாது.
ஒரு குருவின் மூலம் உபதேசம் பெற்று, தகுந்த நியம நிஷ்டையுடன் இருந்தால் மட்டுமே சொல்ல வேண்டும். இது, எல்லாருக்கும் சாத்தியம் இல்லை என்பதால், கந்தசஷ்டி கவசம் எழுதிய, தேவராய சுவாமிகள், தன் பாடல் வரிகளில் இந்த மந்திரச் சொற்களைச் சேர்த்து விட்டார்.
இந்த வரிகளைச் சொன்னால், நாம் நியமத்துடன் மேற்கண்ட மந்திரங்களைச் சொன்னதாக அர்த்தமாகிறது. நம் முக்திக்காக, தேவராய சுவாமி இதைச் செய்துள்ளார்.
கந்தசஷ்டி கவசம் பாடும்போது, இந்த வரிகளை உணர்ச்சிப்பூர்வமாக, பொருள் உணர்ந்து பாடுங்கள். முருகப்பெருமான் எல்லா நன்மைகளையும் அருள்வார்.

தி. செல்லப்பா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
18-நவ-202002:07:59 IST Report Abuse
Manian இதில் வேடிக்கை என்னவென்றால் மந்திரம், தோத்திரம், நமாஸ் சொன்னால்த்தான் ஆண்டவன் அருள் புரிவான் என்பதே தவறாக தோன்றலாம். மனத்தை கட்டுத்தறி இல்லாமல் ஓடுவதை நிறுத்தி, "ஊணினை உருக்கி, உள் ஒளி பெருக்கி.." என்ற நிலையில் மூளையில் -டோப்பாமின்(Dopamine), எண்டார்பின் (Endorphin), செரடோனின் (Serotonin) என்ற மூன்று ஹா்மோன்கள் உற்பத்தியை பெருக்கி மெய் மறந்த நிலையை எய்தலாகும் வழியே ஸ்ஸோஸ்த்திர பாடல் நிலை. இதுவே செலவில்லாத மனோவியாதி நிவாரணி இந்த நிவாரணியை யோகா மூச்சுப் பயிற்ச்சி, சங்கீதம், கஞ்ஜா, கள் வெறி என்ற பல வழிகளில், முறைகளிலும் உருவாக்கலாம். நாமசங்கீர்தனம் இதற்காகவே. தேவராய சுவாமி, அருணகிரி, ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லோருமே தமிழ் வழி பாடல்கள் மூலம் பத்தி வழி மன இறுக்க நீக்க வழியை காட்டி உள்ளார்கள். இன்றும் அதே போல அராபிக் மொழியில் முஸ்லிம்களும், லத்தீன் மொழியில் கிருஸ்துவ்களும், யூத மொழியில் யூதர்களும் பாடுகிறார்கள். சமிஸ்கிருதம் கற்றவர்கள் "ஐம்,க்ளீம்,க்ரீம்" என்கிறார்கள். வழி முறை இல்லை என்றால் யாரும் இந்த மன அமைதி பெற முடியாது. சமுதாய கட்டுப் பாட்டுக்காக சட்டங்கள் இருப்பது போலவே, நியம, நிஷ்டை குரு மூலம் கற்க வேண்டும் என்றார்கள். ஒரு தாய்க்கே தன் ஒவ்வொரு குழந்தை பற்றி புரிதல் உண்டு. அது போலவே குரு முக கல்வி. திரு செல்லப்பாவின் வரிகளில் குற்றம் காண இதை எழுதவில்லை. அதற்கு விரிவுறையே இது.
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
16-நவ-202006:19:53 IST Report Abuse
Manian "தீட்சை பெற்றவர்களும், வேதம் கற்றவர்களும் மட்டுமே மந்திரங்களை உச்சரிக்க கடமைப்பட்டவர்கள் “ :தவறான கருத்து:- ஏழ்மையை ஏற்று, 5 வீடுகளில் பிச்ச கேட்டு வாங்கி, கிடைத்தால் மட்டுமே உண்டு, கல்வி கற்ற (வேதக் கல்வியே, யோகா, தற்காப்பு கலை...) கற்று, புலன்களை அடக்க கற்று, எவருக்கும் இலவசமாக கல்வி கற்பிப்பவர்களே தீக்ஷை பெற்று, பலன் பெற்று, அதை சமூக நலனுக்கே அர்ப்பணிப்பவர்களுக்கே "அய்ம்,கீளீம், க்ரீம்" என்ற நவ(9) மந்ரங்களை கற்று தந்தார்கள். இவை வடமொழியில் இருந்தன.(பல மருத்துவ சொற்கள் இன்றும் லத்தீன் மொழியில் இருப்பது போல்). இவற்றை கற்க ஏழ்மை பூண்டவர்களே, சுய பலன் கருதாமல் கற்கலாம் என்ற விதி முறைகளை ஏற்படுத்தினார்கள்.. இதை ஏற்காத விஸ்வாமித்ரர் என்ற ஷத்திரிய அரசன் பல தடவை முயன்று தோல்வி அடைந்தான். பிறகு எல்லாம் துறந்து, ஏழை அந்தணாக மாறி பிரம்ம ஞானம் அடைந்தான். அதனாலேயே, ராமன் என்ற ஷத்திரிய அரசன் மூலம் ராட்சர்களை கொன்றார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X