அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2020
00:00

எஸ். கண்ணகி, சிவகாசி: பெண்களுக்குத் தேவையானது பொறுமையா, பொறாமையா?
பொறுமை! இப்போதுள்ள பெண்களுக்கு முதலாவது குறைந்து விட்டது போல தெரிகிறதே!

கு. அருணாசலம், தென்காசி: ஜவுளிக் கடை, நகைக் கடை விளம்பரங்களில் அந்தந்த கடை அதிபர்களே தோன்றுகின்றனரே...
நடிகர்கள் என்றால், 'கால்ஷீட்' வாங்க வேண்டும்... லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும்... இதற்கு பதில் தாமே என்றால், தமக்கும் விளம்பரம் கிடைக்கும்... காசும், 'வேஸ்ட்' இல்லையே!

மு. நாகூர், சுந்தரமுடையான்: இன வெறி, நிற வெறி இவ்விரண்டில் மக்களை பாதிப்பது எது?
முதலாவது தான். உயர்ந்த இனம் என சொல்லப் படுவோர்களிலும், கறுப்பு நிறத்தவர் உள்ளனரே... இன வெறியும், இங்குள்ள பதவி ஆசை பிடித்த சில கட்சிகளால் துாண்டப்படுவதே! மற்றபடி மக்கள் மத்தியில், இன வெறி என்பதெல்லாம் இல்லவே இல்லை எனச் சொல்லலாம்!

* பா. காமாட்சி, பெண்ணாடம், கடலுார்: நாம் சிறுக, சிறுக சேர்த்த பணத்தை, தங்கத்தில் முதலீடு செய்யலாமா அல்லது நிலத்தில் முதலீடு செய்யலாமா?
இரண்டாவதில் முதலீடு செய்தால், உடனே மீட்பது கஷ்டம்; முதலாவது - தங்கத்தில் முதலீடு செய்தால், சுலபம்... மீட்டு எடுக்க! இப்போது தான் தங்கத்தை அடகு வைத்து மீட்க, பல அடகு கடைகளின் விளம்பரம் வருகின்றனவே, 'டிவி'யில்!

* ஆர். வரதகிருஷ்ணன், குணமங்கலம், கடலுார்: ஊழல் செய்து, நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவருக்கு, கோடிக்கணக்கில் செலவு செய்து நினைவிடம் அமைப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதா?
தமது இந்நாளைய பதவிக்கு நன்றி செலுத்துகின்றனர். ஜெயிலுக்கு சென்றவர்களுக்கு நினைவிடம் அமைப்பது படு கேவலம்!

டி. ராஜன், மதுரை: குழந்தைகளுக்குக் கூட, 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்துகின்றனரே... அதைப் பற்றி...
என் நண்பரின் பேத்தி, இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். 9:00 மணியானதும், தனது, 'லாப் டாப்'பில் பாடங்களை ஒழுங்காக கவனிக்கிறாள்... டீச்சரிடம் சந்தேகங்களை கேட்கிறாள்! அவளது ஒரே ஏக்கம், கூடப் படிப்போரை நேரில் சந்திக்க முடியவில்லையே... அவர்களுடன், உரையாட, விளையாட முடிவதில்லையே என்பதே!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
16-நவ-202009:30:57 IST Report Abuse
D.Ambujavalli யார் கண்டது ? இப்போதிருக்கும் எத்தனை பிரபலங்கள் சிறை செல்ல வேண்டியிருக்குமோ? அவ்விதம் இருப்பின், அவர்கள் பின் வருவோர் கூட அரசு செலவில் தமக்கு நினைவிடம் எழுப்பினால் எதிர்ப்புக் குரல் எழும்பாமல் முன்னுதாரணமாக இதைக் கூறலாமே மேலும் கல்வெட்டில் கூட 'ஐம்பது கொலைக்காக, எட்டாயிரம் கோடிக்காக சிறை சென்ற செம்மல் என்று 'மெய்க்கீர்த்தி' பொறித்துக்கொள்ளலாம்
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
15-நவ-202002:03:33 IST Report Abuse
Manian கண்ணகி: பொறாமை அது தாழ்வுணர்வு மனோ வியாதி. ஆரோக்கியத்தை அழிக்கும். அதை "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற சங்க பாடல் வரிகளில் காணலாம். எண்ணை தேய்த்து மணலில் பிரண்டாலும் ஒட்டறுதான் ஒட்டும் என்ற சொவாடை காட்டுகிறது. ஆனால் பொறுமை வர, தினசரி யோகா மூச்சு பயிர்ச்சி 10 நிமிஷம் தேவை. இதை" பொறுத்தார் பூமி ஆள்வார். மற்றவர் வெறுத்துச் சாவார்" என்றார்கள். கீதையில் கண்ணன் இதையே வேறு விதமாக சொல்கிறான். உன் விருப்பமான செயலை மட்டுமே செய்யும் உறிமை உனக்கு உண்டு, ஆனால் பலனையும் நீயே தீர்மானிக்கும் உறிமை உனக்கு இல்லை. ஆகவே பொறாமையால் எந்த செயலின் (உன்னுடையது, பிறருடையது) முடிவையும் உன்னால் மாற்றும் உரிமை உனக்கில்லை, மாற்ற முடியாது", ஆகவே பொறாமை வேண்டாம்
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
15-நவ-202001:32:33 IST Report Abuse
Manian காமாட்சி: கடவுள் இனி மேல் புதிசா நிலத்தை உண்டாக்கப் போவதில்லை. ஆகவே வீடுகள் மதிப்பிழக்கும், ஆனால் ஜனத் தொகை பெருக்கம் கூடும். ஆக நிலம் விலை 100 மடங்கு வரை கூடும். ஆனல், தங்கமானாலும், நிலமானாலும் பறிபோகும். அப்ப, எதில் ஈடு செய்தாலும் ஆபத்தே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X