அஜீத் போட்ட, 'கண்டிஷன்!'
அஜீத்குமார் நடித்த, பில்லா - - 2 மற்றும் மங்காத்தா என, பல படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர்ராஜா, தற்போது, வலிமை படத்திற்கும் இசையமைக்கிறார். இந்நிலையில், திடீரென்று ஒருநாள், யுவனுக்கு போன் செய்த அஜீத், 'இதற்கு முந்தைய என் படங்களில் கிடார் இசைக்கருவியை அதிகமாக பயன்படுத்தி விட்டீர்கள். அதனால், வலிமை படத்தில் கிடாரே இல்லாமல், 'தீம் மியூசிக்' மற்றும் பின்னணி இசையமையுங்கள்...' என்று கேட்டுக் கொண்டார். 'அஜீத்தே கேட்டுக்கொண்டதால், அதை ஒரு சவாலாக ஏற்று, வலிமை படத்திற்கு, கிடாரை பயன்படுத்தாமல், இசையமைத்து வருகிறேன்...' என்கிறார், யுவன் சங்கர்ராஜா.
— சினிமா பொன்னையா
'டேட்டிங்' நாயகியான, யாஷிகா ஆனந்த்!
முன்னழகு பின்னழகு என, மொத்த அழகையும் காட்டி, யாஷிகா ஆனந்த் வெளியிட்ட, 'ஆல்பம்'களைப் பார்த்து, ரசிகர்கள் கிறங்கிப்போய், 'கமென்ட்' கொடுத்ததோடு சரி, படங்கள் எதுவும், 'புக்' ஆகவில்லை. அதனால், குறுக்கு வழி தான், 'ஒர்க் - அவுட்' ஆகும் என்று, 'டேட்டிங்' செல்வதில் ஆர்வமுள்ள சில, நடிகர்களை, தட்டித் துாக்கியிருக்கிறார், யாஷிகா ஆனந்த். விளைவு, அவர்கள் மூலமாக, அம்மணிக்கு படங்கள், 'கிளிக்' ஆனதோ இல்லையோ, ஊர் சுற்றுவதில் ரொம்ப, 'பிசி'யாகி விட்டார். 'பல இளசுகள், என் பாக்கெட்டில் இருப்பதால், கூடிய சீக்கிரமே, படங்களும், என் பாக்கெட்டில் நிரம்பி வழியும்...' என்று, நம்புகிறார். ஆள் ஜம்பமே தவிர, வேலை ஜம்பம் கிடையாது.
— எலீசா
புராண காலத்துக்கு செல்லும், அனுஷ்கா!
முத்தின கத்தரிக்காய் ஆகிவிட்டதால், இனிமேல் கவர்ச்சி உடை தரித்து, 'ரொமான்ஸ்' செய்வதெல்லாம் எடுபடாது என்று, அனுஷ்காவின் அபிமான இயக்குனர்கள், அவருக்கு, 'அட்வைஸ்' கொடுத்து விட்டனர். அதனால், சரித்திர கதைகள் பக்கம் திரும்பியுள்ள, அனுஷ்கா விரைவில், சகுந்தலை என்ற புராண படத்தில் நடிக்கப் போகிறார். அதோடு, சரித்திர பட நடிகை என்ற, 'இமேஜை'யாவது அழுத்தமாக பிடித்துக் கொள்வதற்காக, அடுத்தடுத்து நடிக்கவும் வேறு சில புராணப் பட இயக்குனர்களை அணுகி, பட வேட்டையில் ஈடுபட்டுள்ளார். தேடிப்போனது அகப்பட்டது போல!
— எலீசா
ஓவர் சூடு காட்டிய, மாளவிகா!
மாஸ்டர் பட நாயகி, மாளவிகா மோகனின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விஜய் ரசிகர்களை உசுப்பேற்றுவதற்காக, தன் படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, பரபரப்பு கூட்டி வந்த, மாளவிகா, தற்போது, டவல் மட்டுமே கட்டியிருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ஓவர் சூடு காட்டி விட்டார்.
ஆனால், அதைப்பார்த்த ரசிகர்களோ, 'ஓவர் கவர்ச்சி, உடம்புக்கு ஆகாதும்மா. சகிக்கல...' என்று, 'கமென்ட்' கொடுத்து, மாளவிகாவை கடுப்பேற்றி விட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த, மாளவிகா, இனிமேல், ஆடை குறைப்பு விவகாரத்தில், அடக்கி வாசிக்க முடிவெடுத்துள்ளார். ஆடி ஓடி நிலைக்கு வந்தது!
— எலீசா
சூரியை, 'டீலில்' விட்ட இயக்குனர்கள்!
வெற்றிமாறன் இயக்கும் படத்தில், 'ஹீரோ'வாக நடிக்க, 'சிக்ஸ்பேக்' நடிகராக மாறியுள்ள சூரி, காமெடியையும் தொடர நினைக்கிறார். ஆனால், அவர், 'ஹீரோ'வாகி விட்டதை அடுத்து, 'இனிமேல் உங்களால், முன்பு மாதிரி காமெடியில் முழு ஈடுபாடு காட்ட முடியாது...' என்று சொல்லி, அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வந்த இயக்குனர்களே, ஓரங்கட்டி வருகின்றனர். இதனால், 'ஆற்றை நம்பி சேற்றில் காலை வைத்த கதையாகி விடுமோ நிலைமை...' என்று கலக்கத்தில் உள்ளார், சூரி.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
காக்கா முட்டை நடிகை, 'மீடியம் பட்ஜெட்' படங்களாகவே நடித்து வருவதால், அவருக்கான சன்மானம் மிகக் குறைவாகவே உள்ளதாம். அதனால், தமிழுக்கு வரும் அண்டை மாநில நடிகையரின், 'ரூட்'டில் பயணித்து, தன் படக்கூலியையும் எகிற விட வேண்டும் என்று, தற்போது வரிந்து கட்டியிருக்கிறார். அதன் காரணமாக, இதுவரை, 'கோலிவுட் மிட்நைட் பார்ட்டி'களை துாரத்தில் நின்றபடியே, வெறிச்சு பார்த்து வந்த நடிகை, இப்போது, தானும் வெறியுடன், கோதாவில் குதித்து விட்டார். அங்கு வரும் மெகா படாதிபதிகள் மற்றும் இயக்குனர்களை குறி வைத்து, வீழ்த்தத் துவங்கியிருக்கிறார்.
'அடியே... இந்த கூத்தை கேளேன். நாம பிறந்த நாள், திருமண நாள் மட்டுமல்லாமல், எடுத்ததற்கெல்லாம் ஓட்டலில், 'பார்ட்டி' வைத்து, கொண்டாடுவோம் அல்லவா... அப்பல்லாம், நம்ம வகுப்பு தோழி ஐஸ்வர்யா, 'நான் அங்கெல்லாம் வரமாட்டேன்பா... உவ்வே...' என்று, பிலிம் காட்டுவாளே... இப்ப என்னாச்சு தெரியுமா... அவளோட துாரத்து சொந்தக்காரர் ஒருவரது மகன், அமெரிக்காவில் வேலை செய்கிறானாம். அடுத்த மாதம் அங்கு வரப்போறானாம். அவனை எப்படியாவது வளைத்துப் போடணும்ன்னு, 'எந்த ஓட்டலில், 'பார்ட்டி' வைக்கலாம்...' என்று, எல்லாரிடமும் ஆலோசனை கேட்டுட்டு இருக்கிறாள்...' என்று, பேசிக் கொண்டனர், தோழியர் இருவர்.
சினி துளிகள்!
* தன் தாய்மொழியான தெலுங்கில் நடித்த முதல் படமே, வெற்றி பெறாததால், அடுத்தபடியாக, தெலுங்கில் கவனம் செலுத்துவதை நிறுத்தி விட்டார், ஐஸ்வர்யா ராஜேஷ்.
* மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனிகபூர் தயாரிக்கும், ப்ரதி பூவன் கோழி -என்ற மலையாள படத்தின், தமிழ், 'ரீ - மேக்'கில், நயன்தாரா நடிக்கிறார்.
அவ்ளோதான்!