திண்ணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2020
00:00

நவம்பர் 19 - இந்திரா பிறந்த நாள்
ஒளிப் பதிப்பகம், மலையமான் எழுதிய, 'அன்னை இந்திரா' நுாலிலிருந்து: டீன் - ஏஜ் பருவத்தில், தன்னை ஒத்தவர்களை வைத்து, ஒரு படை அமைத்திருந்தார், இந்திரா. அது, கட்சி அறிவிப்புகளை எழுதும், கொடிகளை தயாரிக்கும், கூட்ட அறிவிப்புகளை மக்களிடம் எடுத்து செல்லும், தொண்டர்கள் ஊர்வலம் போகும்போது தண்ணீர் கொடுக்கும்.
மேலும், போலீசாரின் பேச்சை, அருகில் விளையாடியபடி, மனதில் பதிந்து, சம்பந்தப்பட்டவரிடம் அந்த தகவல் அனுப்பும்.
இந்த சிறுவர் பட்டாளத்தின் வீர தீர செயல்களை, தலைவர்கள் வரை அறிந்தனர்.
ஒரு சமயம், அதற்கு சரியான பெயர் கிடைக்காததால், தன் அம்மாவிடம், 'அதற்கு ஒரு பெயர் சொல்லம்மா...' எனக் கேட்டார், இந்திரா.
'வானர சேனை...' என்றார், அம்மா.
இதை கேட்டு, இந்திரா முகம் வாடியது.
'அம்மா, நாங்கள் எவ்வளவு சிறப்பாக வேலை செய்கிறோம். எங்களைப் போய் மரத்தில் ஏறி சேட்டை புரியும் குரங்கு கூட்டம் என்று சொல்கிறாயே...' என்றார்.
'நான் சொல்வதை நீ தவறாக புரிந்து கொண்டிருக்கிறாய்...'
'அம்மா, எங்கள் அரிய சேவையை, குரங்கு சேட்டை என நினைத்துக் கொண்டீர்களா...'
'உனக்கு, ராமாயணம் தெரியுமா...'
'ஓ நன்றாக தெரியும்...'
'சரி, அதில் ராமனுக்கு லட்சுமணனை போன்று, சிறந்த உதவி செய்தவன் யார்?'
'அனுமன்...'
'எப்படி?'
'அனுமனும், அவனுடைய தலைவனுமாகிய சுக்ரீவன், தன் வானரப் படையுடன், ராமனுக்கு உதவி செய்தனர்...' என்றார், இந்திரா.
'அது மட்டுமல்ல, சாகத் துணிந்த சீதையை காப்பாற்றியதும், அனுமன் தான். மயங்கி கிடந்த லட்சுமணனை உயிர்ப்பித்தவனும், அனுமன் தான். இப்படி பல அரிய செயல்களை அனுமன் செய்தான். அவன் யார்?'
'ஒரு வானரம்...'
'அப்படி இருக்கும்போது, ராமானாலே போற்றி புகழப்பட்ட அந்த வானரத்தின் பெயரில் ஒரு சேனை அமைவது சிறப்பு தானே?' என்றார், அம்மா.
உண்மையை புரிந்து கொண்ட இந்திரா, தன் படையினருக்கு, 'வானர சேனை' என்ற பெயரை சூட்டினார்.

க.அருச்சுனன் எழுதிய, 'பெரியோர் வாழ்வில் சுவையானவை' நுாலிலிருந்து: கடந்த, 1969ல், பல எதிர்ப்புகளுக்கிடையே, பெரிய வங்கிகளை, தேசிய உடைமையாக்கிய இந்திரா, 'என்னுடைய திட்டங்கள் எல்லாம் ஏழை - எளிய மக்களுக்கு உடனே போய் சேரப் போவதில்லை என்று, தெரியும். எனினும், ஒரு மாறுதலை துவக்கி வைக்கிறேன்.
'இன்று துவங்கும் ஒரு நன்மை, நுாறாகவும், ஆயிரமாகவும், லட்சமாகவும், கோடியாகவும் உயர்ந்து அனைவரையும் அடையும் என நம்புகிறேன்.
'பாரத நாட்டில், இன்னும் பலர், வறுமையில் வாடுகின்றனர். என்னைப் பொறுத்தவரையில், பொருளாதாரத் துறையில், இன்னொரு சுதந்திரப் போரை துவக்கி இருக்கிறேன்.
'நான் பெற்ற பதவிகள் மற்றும் பெருமைகளை, அப்பா நேருவின் கொடை என்ற கூற்றை ஏற்கவில்லை. என் வாழ்க்கையை நெறிப்படுத்தியதில், என் அப்பாவுக்கு பங்கு உண்டு. அவர் உருவாக்கிக் கொடுத்த வாய்ப்புகளை நான் திறமையுடன் பயன்படுத்திக் கொண்டேன் என்பது தான் உண்மை.
'நம் நதிகளிடையே பாலங்களை கட்டினால் மட்டும் போதாது. மனித இதயங்களை இணைக்கும் பாலங்களை உருவாக்க வேண்டும். அன்பு, நட்பு, சகோதரத்துவம் மூலம், அத்தகைய பாலங்களை கட்ட முடியும்...' என்றார்.

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
19-நவ-202014:35:39 IST Report Abuse
N Annamalai அவர் செய்த வங்கி தேசியமயமாக்கல் இன்று அனைவரும் தின்று கொழுக்க வகை செய்து விட்டது .அவர் ஏழைகளுக்கு உதவி என்று நினைத்தது தவறாக முடிந்து விட்டது .
Rate this:
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்
16-நவ-202000:14:37 IST Report Abuse
கதிரழகன், SSLC நகர்வாலா சம்பவம் நினைவு இருக்க எவனுக்காச்சும்? ஸ்டேட் பாங்கு அறுபது லட்சம் ரூபாய் இவர் கிட்ட குடுத்து அனுப்பினாக. பின்னால இந்த ஆளு இந்திரா காந்தி மாதிரி பொய் குரல் ல பேசி ஏமாத்திட்டாரு ன்னு கேஸை முடிச்சாக. சும்மா ஒரு போன் போட்டு "நான் தான் இந்திரா காந்தி. ஆளு அனுப்பறேன் 60 லட்சம் குடுத்தனுப்பு " ன்னு சொன்னா குடுக்க முடியுமா, என்ன அக்கவுண்டு என்ன கையெழுத்து எல்லாம் பாக்க வேணாம்? இதுக்கு முன்னாடி இப்படி கொடுத்தீயாளா? ஒரு கேள்வி மொறை நெறி இல்லாத கேஸை முடிச்சாக.
Rate this:
Manian - Chennai,ஈரான்
17-நவ-202003:10:12 IST Report Abuse
Manianஅண்ணாச்சி, நெல்லையிலே இப்பிடி உண்மையிலேயே நடந்ததேஆர்எம்கே ஜவுளி கடையிலே ஒரு ஆளு 2000 ரூவாக்கு பட்டு புடவை எடுத்தான். பையிலை கை விட்டு ஒரு நூறு ரூ நோட்டை எடுத்தான். ஐயோ, பர்ச வூட்லே வுட்டுட்டு வந்துட்டேனே. சாங்காலம் வற்றேன்னான். முதலாளிக்கு அந்த வியவாரம் விட்டு போறதிலே இஷ்டம் இல்லை. அவரு, இந்த கடை பையனை கூடஅனுப்பறேன், அவன் கிட்டே மீதி பணத்தை குடுங்கன்னாரு. வந்த ஆளு சரின்னு திருநெல்வேலி டவுண்லே இருந்து நெல்லை ஜங்ஷன் சந்திரவிலாசு ஹோட்டலுக்கு கூட்டி போய், ஐயா எனக்கு தர வேண்டிய 2000 த்தை இந்த பையனிடம் கொடுங்க என்று சொல்லி போய்விட்டான். 2 மணி நேரமாச்சே, சீக்கிரமா தாங்கன்னான் பையன். தம்பி,2000 லட்டு பிடிக்க நேரம் அதிகமாகத்தானே ஆகும் என்றார் கல்லாக்காரர். ஆகவே, ஏமாற்றவன் இருக்குறவரை, ஏமாத்தரவனும் இருப்பான்...
Rate this:
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்
15-நவ-202023:58:30 IST Report Abuse
கதிரழகன், SSLC 1970 தேர்தல்ல ரஷிய மை வெச்சு வாக்கு சீட்டுக்கு முத்திரை குத்தினாக. வாக்கு சீட்டுல ரசாயனம். ரெண்டு மணி நேரத்துல கை ராட்டினம் சின்னத்துல நாம குத்தின வாக்கு அழிஞ்சுடும். பதிலுக்கு பசுவும் கன்றும் சின்னத்துக்கு (காங்கிரஸ் ஐ ) ஒட்டு முத்திரை உருவாகும். அதுவும் ரஷிய ரசாயன மை / பேப்பர். இப்படித்தான் இந்திரா காந்தி ஜெயிச்சாக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X