இன்று, நாம் பயன்படுத்தும் குடைகள், 18ம் நுாற்றாண்டில் தான் அறிமுகமானது. முதலில், மன்னர்கள், போப் போன்றவர்கள் மட்டுமே குடையை பயன்படுத்தினர்.
அடுத்து, பெண்களின் அலங்கார பொருளானது. பெரிய இடத்து பெண்கள், அதை பந்தாவாக பிடித்து பவனி வந்தனர். சில பெண்களுக்கு, குடை பிடிக்க, பின்னால் தனி ஆள் கூட உண்டு.
அந்த காலகட்டத்தில், குடை, ஆண்கள் பயன்படுத்தாத பொருள். இந்த சூழலில், ஜோன்ஸ் ஹான்வே என்பவர், துணிந்து, ஒரு குடையை பிடித்தபடி பல இடங்களுக்குச் சென்றார்.
முதலில், 'இது பெண் களுக்கானது...' என, கிண்டல் அடித்த ஆண்கள், ஒரு கட்டத்தில், தாங்களும் அதை பிடித்து நடக்க ஆரம்பித்தனர். பிறகு தான் அனைவரும் பயன்படுத்த துவங்கினர்.
* குடையின் வெளிப்பக்கம், 'டெப்ளான்' என்ற ரசாயனம் பூசப்படுகிறது. இதுவே, மழை நீர் உள்ளே புகாமல் தடுக்கிறது
* இன்று நாம் பயன்படுத்தும் குடைகளில் பெரும்பாலானவை, சீனாவிலிருந்து இறக்குமதி ஆனவை
* சீனாவில், ஷாங்காய் என்ற நகரம், குடைக்கு பிரபலம். இங்கு, ஆயிரத்திற்கு மேற்பட்ட குடை தொழிற்சாலைகள் உள்ளன
* கடந்த, 1928ல், பாக்கெட் குடைகளும், 1969ல், நவீன மடக்கு குடைகளும் பிரபலமாகின.
— ஜோல்னாபையன்