ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோஸ் கோபெரி என்பவர், பெரிய கண்ணாடி தொட்டிக்குள், 200 கிலோ ஐஸ் கட்டிகளை நிரப்பி, அதற்குள், இரண்டரை மணி நேரம் நின்று சாதித்துள்ளார்.
இந்த சாதனையின் போது, அவரது தலை மட்டும், ஐஸ் கட்டிக்கு வெளியில் இருக்கும். உடலின் மற்ற பாகங்கள் அனைத்தும், உயிரை உறைய வைக்கும் ஐஸ் கட்டிக்குள் இருக்கும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், இதேபோன்ற ஐஸ் தொட்டிக்குள், 30 நிமிடங்கள் நின்று, சாதனை படைத்திருந்தார், ஜோஸ். தற்போது, தன் சாதனையை தானே முறியடித்துள்ளார்.
—ஜோல்னாபையன்